புகழ்ச்சியமைந்த 1அழகினையுடைய கண்ணினையுடையாய்! சாயலாய்! இனமான மீன்களது மாறுபாடுகெடத் தாக்கிவென்ற சினத்தையுடைய மீனாகிய எறியுஞ் (1) சுறாவினது மருப்பாற்
நாற்றத்தை நீக்கி நன்மணம் வீசுமென்ப. இதன் மடலைப் பண்டைக்காலத்தும் மகளிர் தலையிலணிந்துவந்தனர். ஆடவரும் மாலையாக அணிதலுண்டென்ப. இதனைக் காமவேளின் வாட்படையென்பதும் மரபு. தாழைவேறு கண்டல்வேறு. தாழைக்கும் கண்டலென்று ஒரு பெயருண்டு. இவற்றுட் பலவும் (1) ‘‘வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை, குருகுள ரிடத்தின் விரிபுதோ டவிழுங், கானல்’’ (2) ‘‘அல்கலுந், தயங்குதிரைபொருத தாழை வெண்பூக், குருகென மலரும் பெருந்துறை’’ (3) ‘‘முழங்குதிரை கொழிஇய மூரி யெக்கர்த், தடந்தாட் டாழை முள்ளுடை நெடுந்தோட், டகமடற் பொதுளிய முகைமுதிர் வான்பூங், கோடுவார்ந் தன்ன வெண்பூ’’ (4) ‘‘உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுத, லரவுவாள் வாய முள்ளிலைத் தாழை’’ (5) ‘‘எக்கர்த் தாழை மடல்வயி னானும்’’ (6) ‘‘முடவுடற் கைதை மடன்முறித் திட்டும்’’ (7) ‘‘திரைமுதி ரரைய தடந்தாட் டாழைச், சுறவுமருப் பன்ன முட்டோ டொசிய, விறவா ரினக்குரு கிறைகொள விருக்கும்’’ (8) ‘‘நீடிலைத் தாழை’’ (9) ’’முடம்படு முள்ளிலை முடங்கன் மூரிசால், கடம்படு கரிமருப் பீன்று’’ (10) ‘‘முடமுட்டாழை’’ (11) ‘‘கொடுமுண் மடற்றாழைக் கூன்புற வான்பூ, விடையு ளிழுதொப்பத், தோன்றிப் - புடையெல்லாந், தெய்வங் கமழும்’’ (12) ‘‘பல்பூங்கானன் முள்ளிலைத் தாழை, சோறு சொரி குடவயிற் கூம்புமுகை யவிழ’’ (13) ‘‘அள்ளிலைத், தடவுநிலைத் தாழை’’ (14) ‘‘கழுதுருவின கஞலிலையென கழிமடலின கைதை’’ (15) ‘‘இறவுப்புறத்தன்ன பிணர்படுதடவுமுதற், சுறவுக்கோட்டன்ன முள்ளிலைத் தாழை, பெருங்களிற்று மருப்பி னன்ன வரும்புமுதிர்பு, நன்மானுழையின் வேறுபடத்தோன்றி’’ (16) ‘‘வாள்போல் வாய கொழுமடற் றாழை’’ (17) ‘‘அரவெயிற் றணிமுட் கைதை’’ (18) ‘‘மோட்டுமண லடைகரைப், பேஎய்த் தலைய பிணரரைத் தாழை, யெயிறுடை நெடுந்தோடுகாப்பப் பலவுடன், வயிறுடைப்போது வாலிதின் விரீஇப், புலவுப்பொரு தழித்த பூநாறு பாப்பின்’’ (19) ‘‘தாழை முகிழ்வேழமிகு தந்தமென வுந்துதகு சண்பை’’ (20) ‘‘யானைக் கூர்நுதி மருப்பிற் றோன்றி, வண்டொடு சுரும்பர் மூச மன்றலம் பொதிவாய் விண்டு, கண்ட னாண்மடற்றேன் சிந்துங் கண்டகி’’ (21) ‘‘மோடுடை நெட்டிலை முடவெண் டாழையந், தோடுடை நறுமலர் தோன்றல் கொய்வது, பாடுடை நெடுமடற் பனைக்கை வேழவெண், கோடடி பிடுங்கிய கோலம் போன்மரோ’’ (22) ‘‘பீடடைந் தவர்பிடர் புடைப்பவானையின், கோடுடைந்துதிர்ந்தன கொடுமுட்கேதகைத், தோடுடைர் தொருவழித் தொகுத லொத்தவே’’ (பிரதிபேதம்)1அழகினையுடைய கண்ணென்க. சாயலினமாக மீன்களது.
|