(1) சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்துப் புறவிதழொடித்த நெய்தற் பூவை நெடியநாரிலே தொடுத்து அழகுபெறக் கட்டிக் கையாலே வாசித்தலையுடைய யாழினது ஓசையைத் 1தம்மிடத்தேகொண்ட இனமான 2வண்டுகள் 3ஆளா[ப்]பஞ்செய்து பாடத்தாழாமல் தேன்றுளிக்கும்
(23) ‘‘முட்டாழைக ளானை, வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில்’’ (24) ‘‘மாமன்றற் கைதையங் கன்னிதன் மொக்குள் வனமுலைமேல்’’ (25) ‘‘அலைநீர்த்தாழை யன்னம் பூப்பவும்’’ (26) ‘‘தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை’’ (27) ‘‘தோடவிழ் தாழை துறைகமழக் கோடுடையும்’’ (28) ‘‘பழந்தூங்கு முடத்தாழை’’ (29) ‘‘சோறுவாய் திறந்த செம்பொற் றொகுமடற்கைதை’’ (30) ‘‘முருகுவாய் முட்டாழை நீண்முகைபார்ப் பென்றே, குருகுவாய்ப் பெய்திரை கொள்ளா-துருகிமிக, வின்னா வெயில்சிற கான்மறைக்குஞ் சேர்ப்ப’’ (31) ‘‘நெய்தற் குருகுதன் பிள்ளையென்றெண்ணி நெருங்கிச்சென்று, கைதை மடல்புல்கு தென்கழிப் பாலை’’ (32) ‘‘ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித், தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடு’’ (33) ‘‘பிணர்முடத்தாழை விரிமலர் குருகென, நெடுங்கழிக் குறுங்கயல் நெய்தலுண் மறைந்தும்’’ (34) ‘‘புனற்கயல் கொக்கென்றஞ்சக், கண்டலங்காரமலரரங் கேசர்க்கு’’ (35) ‘‘மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று, தடமண்டு துறைக்கெண்டை, தாமரையின் பூமறைய’’ (36) ‘‘கருங்காற் குருகின்கோளுய்ந்து போகிய, முடங்குபுற விறவின் மோவா யேற்றை, யெறிதிரை தொகுத்த வெக்கர் நெடுங்கோட்டுத் துறுகடற் றலைய தோடுபொதி தாழை, வண்டுபடு வான்போது வெரூஉந், துறை’’ (37) ‘‘வேலை மடற்றாழை யுட்பொதிந்த வெண்டோட்டு, மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக், களிநறவந் தாதூதத் தோன்றிற்றே’’ (38) ‘‘தடித்தெழுந்தொறுந் தாழை பூப்பன’’ (39) ‘‘மாரனுக்கு வாளாமோ லைப்பூவு மால்’’ (40) ‘‘காற் றடித்தது தாழை பூத்தது’’ (41) ‘‘கைதை, சுரும்புந் தும்பி களுமருந்த மாறாதென்றுஞ் சோறிடுமால்’’ (42) ‘‘கண்ட லவிர்பூங் கதுப்பினாய்’’ (43) ‘‘இடைநிலத் தியாத்த, முதிர்பூந் தாழை முடங்கல்வெண்டோட்டு’’ (44) ‘‘சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடையலானே’’ (45) ‘‘அடும்பி னயலது நெடும்பூந் தாழை, தாழை யயலது வீழ்குலைக் கண்டல்’’ (46) ‘‘கண்டலங் கைதையொடு விண்ட முண்டகம்’’ என்று வருவனவற்றால் அறியலாகும். (1) சுறாவினது மருப்பு, சுறாவகையுள் ஒன்றாகிய வேளாவினது கொம்பென்பர். இம்மருப்பில் இரு விளிம்பிலும் வேல்போலக் கூரிய முனைகள் உண்டு. (பிரதிபேதம்)1தன்னிடத்தே, 2வண்டு களாரப்பஞ்செய்து, 3ஆர்ப்பரவஞ்செய்து.
|