வளைவையுடைத்தாகிய மலரையுடைய தாழையினது விழுதாற் றிரிந்து இட்ட ஊசலை நீ போந்து ஆடப்பெறின், நீரையுடைய பெரிதாகிய (1)கடலாகிய தெய்வத்தை நோக்கி நின்னிற் பிரியேன் என்று தெளிவித்து, உன்னுடைய திருந்தின இழையையுடைய மென்றோளைக் கூடினவன் அருமைசெய்தயர்த்ததால் நினக்குண்டாகிய அரிய வருத்தத்தை யான் அவனை எதிர்ப்பட்டு மிகவும் தீர்க்குவேன்போலே இராநின்ற 1தென்றாள். எ - று. சாயல், ஈண்டுத் தலைவிக்கோர் பெயர்த்தன்மையாய் நின்றது. பெறின், தீர்க்குவேன்போலுமென்க. போலும் என்னும் 2முற்றுச்சொல் ஈற்றுமிசை உகரம் மெய்யொழித்துக் கெட்டுநின்றது. கோத்து யாத்து என்னுஞ் செய்தெனெச்சம் இட்டஎன்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. ‘‘தாயத்தினடையா’’ என்னும் (2) பொருளியற் சூத்திரத்தால் என்றோ 3ளென்றாள். இது மேல் வருவனவற்றிற்குங் கொள்க. 12 (3)மாழை, மடமான் பிணையியல் வென்றாய்நின் னூசல் கடைஇயா னிகுப்பநீ டூங்காய் தடமென்றோ ணீத்தான் றிறங்கள் 4பகர்ந்து எ - து: அதுகேட்டுஊசலிடத்தேசென்ற தலைவியை நோக்கி, இளமையையுடைய மடமான் 5பிணையினது நோக்கினியல்பை வென்றவளே! நின் தடமென்றோளைக் கைவிட்டவனுடைய கொடுமையினது கூறுகளைச் சொல்லிப்பாடி நீ ஏறின ஊசலை யான் உயரச்செலுத்தித் தாழ்த்தாட்ட நெடும்பொழுது ஆடாயென்றாள். எ - று.
1. (அ) “பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தக்கால்’’ கலி. 124 : 18; (ஆ) ‘‘தோள்புதி துண்ட ஞான்றைச், சூளும் பொய்யோகடலறி கரியே’’ அகம். 320 : 13 : 14. 2. தொல். பொருளி. சூ. 27. 3. (அ) ‘‘மாழை மானோக்கியு மாற்றாள்’’ திணைமொழி. 7. (ஆ) ‘‘மாழை மானோக்கின் மடமொழி’’ கைந்நிலை. நெய்தல். 11. (இ) ‘‘மாழைமான் மடநோக்கியுன் றோழி’’ நாலா. பெரியதிரு. 5: 8. 1. என்பவை ஒப்புநோக்கற்பாலன. (ஈ) “மாழைமென்னோக்கி” நைடத, சுயம், 156. (உ) “மாழை யுண்கண்” (ஊ) ‘‘மாழை யொண்கண்’’ என மாழை கண்ணுக்கும் அடைமொழியாய் வருகிறது. பெருங். (1) 40 : 301; 56 : 116. (பிரதிபேதம்)1என்றாள். பெறிற்றீர்க்கு, 2பெயரெச்ச மீற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டுநின்றது, 3என்றாள்மாழை, 4படர்ந்து, 5பிணையது.
|