(1) | நீள், காலத்தின் நீட்சியை உணர்த்திற்று. | 15 | நாணினகொ றோழி நாணினகொ றோழி யிரவெலா நற்றோழி நாணின வென்பவை வா (2) ணிலா வேய்க்கும் வயங்கொளி யெக்கர்மே லானாப் பரிய (3) வலவ னளைபுகூஉங் கானற் கமழ்(4)ஞாழல் வீயேய்ப்பத் தோழியென் மேனி சிதைத்தான் றுறை |
எ - து. தலைவி அங்ஙனம் பாடாமையிற் றோழி 1தான், தோழீ! கானலிடத்துக் கமழ்கின்ற ஞாழற்பூவின் நிறத்தையொப்ப நின்மேனி பசப்பித்தவனுடைய துறையிடத்து ஒளியையுடைய நிலாவையொக்கும் விளங்குகின்ற ஒளியினையுடைய இடுமணலின்மேலே ஓடும் அமையாத செலவுகளையுடைய ஞெண்டுகளென்று சொல்லப்படுமவை, இப்பொழுது நம்மைக்கண்டு 2தம் அலையிலேபுகாநின்றன; அங்ஙனம் புகுகையினாலே(1)
1. நீடூங்காய் என்பதை, நீடு ஊங்காய் எனப் பிரித்தலுமாம்; நீடு, நெடுங்காலமென்னும் பொருளிலும் ஊங்குதல், ஆடுதலென்னும் பொருளிலும் வருதலை, ‘‘நீநீடு வாழிய’’ ‘‘ஊக்க வூங்காள்’’ என்பவையும் வலியுறுத்தும். 2. (அ) ‘‘நிலவெக்கர்’’ பொருந. 213. (ஆ) ‘‘நிலாவி னிலங்கு மணன்மலிமறுகின்’’ அகம். 200 : 1. (இ) ‘‘நிலவுமணல் வியன்கானல்’’ புறம். 17 : 11. (ஈ) ‘‘நிலவோ ரன்ன வெண்மணற் பாக்கத்து’’ தமிழ்நெறி. மேற். (உ) ‘‘அறல்விளங்கு நிலாமணல்’’ மணி. 8 : 11. (ஊ) ‘‘செழுநிலவின் றுகளனைய மணற்பரப்புந் திருப்பரப்பு’’ பெரிய. கலிய. 4. 3. (அ) ‘‘அடும்பிவரெக்க ரலவன் வழங்குங் கொடுங்கழிச்சேர்ப்ப னருளானெனத்தெளிந்து கள்ள மனத்தா னயனெறிச் செல்லுங்கொ னல்வளை சோர நடந்து’’ ஐந். எழ. 62. (ஆ) ‘‘ஆழிவா யாங் கலவவோடி யொளிக்கின்ற தென்னோ’’ நள். கலிநீங்கு. 19. 4. ஞாழற்பூ இங்கே பசப்புக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது. (அ) ‘‘சிறுவீ ஞாழற் றேன்றோ யொள்ளிணர், நேரிழை மகளிர் வார்மண லிழைத்த, வண்டற் பாவை வனமுலை முற்றத், தெண்பொறிச் சுணங்கி னைதுபடத் தாஅங், கண்டல் வேலி’’ நற். 191 : 1 - 5. (ஆ) “எக்கர் ஞாழற் பூவி னன்ன சுணங்குவள ரிளமுலை மடந்தைக்கு” ஐங். 149 : என்புழி சுணங்குக்கும் உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது. (இ) இதனைப் பற்றிய மற்றச் செய்திகளை இந்நூற்பக்கம் 787 : 6 -ஆம் குறிப்பால் அறிக. (பிரதிபேதம்)1தானே, 2தன்னனை.
|