இரையாகத் 1தின்னுமதல்லது தாம்ஒன்றன் உயிரைப்போக்கி இரையாக அதனைஉண்ணாத அருட்டுறைவனை நாம்பாடும் அசைந்துவருதலை யுடைய ஊசற்பாட்டை, நீ இயற்பழித்ததனை அழித்து இயற்பட ஒன்றுபாடுவாய் என்றாள். எ - று. 35 அருளினகொ றோழி யருளினகொ றோழி யிரவெலாந் தோழி யருளின வென்பவை (1) கணங்கொ ளிடுமணற் (2) காவி வருந்தப் பிணங்கிரு மோட்ட திரைவந் 2தளிக்கு (3) மணங்கம ழைம்பாலா ரூடலை யாங்கே வணங்கி யுணர்ப்பான் 3றுறை. எ - து. அது கேட்ட தோழி அங்ஙனம் பாடாமையின் தலைவி, மணம் நாறுகின்ற கூந்தலையுடையாரிடத்து உண்டாகிய ஊடலை அதுகண்ட பொழுதே வளைந்து தீர்க்குமவன் துறையிடத்து, திரட்சிகொண்ட (4)இடுமணலாலே காவியென்று சொல்லப்படுமவை வருந்த, அவற்றைத் தம்மிற் பிணங்கி 4வருகின்ற கருமை தங்கிய பெருமையையுடையனவாகிய திரைகள் வந்து அம்மணலைக் கரைத்து அருள்பண்ணாநிற்கும்; ஆகையினாலே அத்திரைகள் தோழீ! அருளினவோ? தோழீ! அருளினவோ? தோழீ! 5எங்ஙனம் அருளினவாயின், தோழீ! இரவெல்லாம் அருளினவாயிருக்குமென இயற்படமொழிந்தாள். எ - று. 6களவுகாலத்துத் தலைவி ‘‘தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையும்’’ (5)கூறுதற்கு உரியளென்றலின், அவன் வயிற்7பரத்தைமை கூறிய காலத்து அதனை வணங்கித் தீர்த்தமை கருதி ஊடலை வணங்கி உணர்ப்பானென்றாள். காற்றுத் தூற்றிய மணலிடத்து அறல்8வருத்தினகாவியைத் திரைவந்து அளித்தாற்போல அலர் தூற்றுதலால் வருந்திய வருத்தத்தை நீக்கி நம்மை அளித்து 9வரைவனென உள்ளுறையுவமங்கொள்க.
1. ‘‘கணங்கொள்.....றுறை’’ என்பது, ஏமஞ்சான்ற உவகைக்கண் தலைவி தான் ஊடியவாறும் மகிழ்ந்தவாறுங் காட்டி அவன்வயிற் பரத்தைமை கூறியதற்கு மேற்கோளாக உள்ளது. தொல். கள. சூ. ..21 இளம். 2. உரவுக்கதிர் தெறுமென வோங்குதிரை விரைபுதன், கரையம லடும் பளித் தா அங்கு’’ கலி. 127 : 20 - 21. 3. ‘‘மணநாறு கதுப்பினாய்’’ கலி. 43 : 23. 4. இடுமண னெடுங்கோட்டைப், பயிறிரை நடுநன்னாட் பாய்ந்துறூஉந் துறைவ” கலி. 135 : 4 - 5. 5. தொல். கள. சூ. 20. (பிரதிபேதம்)1தின்னுமல்லது, 2அழிக்கும், 3வரை, 4வருதற்கரியனவாகிய பெருமை, 5அங்ஙனம், 6களவுக்கால, 7பரத்தமை, 8வருந்தின, 9வரையவென்ன
|