பக்கம் எண் :

820கலித்தொகை

41 (1) எனநாம்
பாட (2) மறைநின்று கேட்டன னீடிய
1வானீர்க் கிடக்கை (3) வயங்கு 2நீர்ச் சேர்ப்பனை
யானென வுணர்ந்து நீநனி மருளத்
தேனிமிர் புன்னை பொருந்தித்
தானூக் கினனவ் வூசலை வந்தே

எ - து. 3என்று அங்ஙனம் இயற்பழித்தும் இயற்படமொழிந்தும் யானும் நீயும் பாட, சேர்ப்பன், பாட்டை மறையநின்று 4கேட்டனனாய் நீடிய(4) வெண்மையையுடைத்தாகிய நீர்க்கிடக்கை விளங்குகின்ற நீர்மையையுடைய சேர்ப்பனை யான் ஊசல் ஊக்கென்றேனென்றும் உணர்ந்து, பின்பு யானென நம்மில் நீ மிகவும் மருளும்படி அவன் தேனினம் ஒலிக்கும் புன்னையைப்பொருந்திநின்று, பின்பு வந்து அவ்வூசலைத் தான் ஊக்கினான்; [அற வருத்தம் அறிந்து வியவாநின்று] (அன்று வருத்தமறிந்துதவியவன் இன்றும்) நம்வருத்தம் அறிந்து வரைந்து கொள்வனென 5ஆற்றுவித்தாள்.
எ - று.

கிடக்கை, கடல்; நீர், கழி(யெனினுமாம்.)

இதனால், தலைவற்கு ஆராய்ச்சி பிறந்தது.

இனி ‘‘உணர்ப்புவயின்வாரா ஊடற்கண்’’ தோழி களவுகாலத்து நிகழ்ந்தமை கூறித் தலைவியை ஊடறீர்த்ததென்று கிளவி கூறி அதற்கேற்ப உரைப்பாருமுளர்.

இஃது ஐஞ்சீரடி வந்த நெடுவெண்பாட்டாகிய தரவும் ஐஞ்சீரடுக்கிய 6குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டும் கொச்சகமும் தளைவிரவின கொச்சக வெண்பாவும் கொச்சகமும் நெடுவெண்பாட்டும் தனிச்சொல்லும் சுரிதகமும் வந்த கொச்சகம்.


1. ‘‘என்றியாம் பாட மறைநின்று கேட்டனன்’’ கலி. 42 : 28; 

2. (அ) ‘‘மறைநின்று கேட்டருளி’’ (ஆ) ‘‘மறைநின்று கேட்டனன்’’ கலி. 41 : 41, 42 : 28.

3. ‘‘வயங்குநீர்த் தண்சேர்ப்ப’’ கலி. 124 : 4, 127 : 5. 

4. வெண்மையை யுடைத்தாகிய சேர்ப்பென்க; சேர்ப்பு - கடற்கரை; ‘‘பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே’’ (புறம். 41 : 6) என வருதல் காண்க.

(பிரதிபேதம்)1வானீர்கிடக்கை, 2நீர்சேர்ப்பனை, 3அன்று அங்ஙனம், 4கேட்டனனாய்ச் சேர்ப்பனை, 5ஆற்றுவத்தாள், நீடிய.......சேர்ப்பனை கிடக்கை, 6குறுவெண்பாட்டுங் கொச்சகமும்.