ஓடியென்னுஞ் செய்தெனெச்சம் "அம்முக் கிளவியும்"என்னும் (1) சூத்திர விதியாற் பிறவினை கொண்டது. அஞ்சுமென்றது பிரியுமாறு நினைந்து முன்னர்த் துயிலின்றிப் பின்னர்த் தாழ்க்கத் துயின்றானென்று அஞ்சினாளென்க. காண் என்னும் முன்னிலைவினை காண்டையெனத் திரிந்தது. மாற்றுமைக்கோடல், கூற்றமும் மூப்பும் உண்டென்றிருத்தல். ‘கடைநா ளிதுவென் றறிந்தாரு மில்லை’ இது நாளது சின்மை ; ‘இளமையுங் காமமு நின்பாணி நில்லா' இஃது இளமையதருமை ; 'உரனுடை யுள்ளத்தை’ இது தாளாண்பக்கம் ; 'செய்பொருண் முற்றிய' இது தேடும் முறைமையிற் றேடவேண்டுமென்றலிற் றகுதியதமைதி ; 'சிறுநனி நீதுஞ்சி...........செல்வோய்' இஃது அன்பினதகலம் ; ‘இடைமுலைக்..................காண்டை’ இஃது அகற்சிய தருமை. (2) 'செய்பொருண் முற்றி.......................என்பாய்' என்பது செல்வத்தாற் பிறந்த உவகை; வளமையானாகும் மனமகிழ்ச்சி இது வென்றலின். "நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே." (3) என்பதனால், தலைவன் முன் ஒருகாற் கூறியவற்றினைத் தோழி தலைவற்குக் கூறிச் செலவழுங்குவித்தாள். "சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே" (4) என்பதனால் வழியருமை கூறினாள். இவள் கூறுகின்ற காலத்து, தலைவற்கு மூப்பென்னும் மெய்ப்பாடு தோன்றிப் பின்னர் அசைவுபிறந்தது; தோழிக்கு நடுக்கம் பிறந்தது. (5) இது பன்னீரடியின் இகந்து ஒரு பொருணுதலாது ஆசிரியத்தளை விரவிவந்த சீர்வகைக் கலிவெண்பா. (11) (13). | செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல வெரிமேய்ந்த கரிவறல் வாய்புகுவ காணாவாய்ப் பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான் றிரிமருப் பேறொடு தேரறற் கோட |
1. தொல். வினை. சூ. 34. இதனுரையிலும் 'உடம்புயங்கி யானை ..............நெறி மயக்குற்ற' என்பது செய்தெனெச்சம் காரணகாரியப்பொருட்டாய்த் தனக்குரிய வினைமுதலானன்றிப் பிறவினை முதலான் முடிந்ததற்கு இவ்வுரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. 2. "உரனுடை யுள்ளத்தை செய்பொருண்முற்றிய வளமையானாகும் பொருளிது வென்பாய்" என்புழி வளமையானாகும் மனமகிழ்ச்சி இதுவெனக் கூறினமையின், இது செல்வம் பொருளாகப் பிறந்த உவகை யாமென்பர், பேராசிரியரும் ; தொல். மெய்ப். சூ. 11. இ - வி. நூலாரும் இங்ஙனமே எழுதுவர்; இ - வி. சூ. 578. 3. தொல். அகத். சூ. 44. 4. தொல். பொருளியல். சூ. 22. 5. இச்செய்தி தொல். செய். சூ. 153. நச்சினார்க்கினியருரையிலும் காணப்படுகின்றது.
|