பக்கம் எண் :

822கலித்தொகை

விரைதேர்ந்துண் டசாவிடூஉம் புள்ளின மிறைகொள
1முரைசுமூன் றாள்பவர் முரணியோர் முரண்டப
நிரை(1) களி றிடைபட 2நெறியாத்த விருக்கைபோற்
(2) சிதைவின்றிச் சென்றுழிச் சிறப்பெய்தி வினைவாய்த்துத்
துறையகலம் வாய்சூழுந் (3) துணிகடற் றண்சேர்ப்ப

3எ - து. (4)முரைசு மூன்றை ஆள்கின்ற பாண்டியர் தம்மொடு மாறுபட்டோருடைய மாறுபாடு கெடும்படி நிரைத்த களிறுகள் ஏனைப்படைக்கு நடுவே நிற்கும்படி நெறியுண்டாகக் கம்பத்தோடே 4கட்டின இருக்கை


1. (அ) ‘‘களிறுங் கந்தும் போல நளிகடற், கூம்புங் கலனுந் தோன்றும்’’ யா - வி. ஒழி. சூ. 2. ‘குன்றவெண்’ மேற். (ஆ) ‘‘பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய்’’ சீவக. 2793. எனவும் (இ) ‘‘அம்பி காழோர், சிறையருங் களிற்றிற் பரதவ ரொய்யும்’’ நற். 74 : 3 - 4 எனவும் (ஈ) ‘‘நாவாய் போல..............உழிதருங் கடாஅ யானையும்’’ மது. 379 - 383 (உ) ‘‘கொல்களிறு மிடைந்து......வங்கந் திரைதிரிந் தாங்கு’’ பதிற். 52 : 1 - 4. (ஊ) ‘‘களிறே, முந்நீர்வழங்கு நாவாய் போலவும்’’ (எ) ‘‘கலம்போலக், களிறுசென்று’’ புறம். 13 : 5, 26 : 2 - 3. (ஏ) ‘‘மயங்குகா லெடுத்த வங்கம் போல......கால வேகங் களிமயக் குற்றென’’ மணி. 4 : 34 - 44. (ஐ) “பொருமால்களிறு போன்றோர், வங்கமொடு போகி...............ஓடுகளி றொப்ப வினி தோடியதை’’ (ஒ) ‘‘மொய்களி, றுடைதிரை மரக்கலம்’’ (ஓ) ‘‘மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட், டாக்கிய கயிறரிந் தோடியெங்கெணும், போக்கறப் பொருவன போன்று தீப்படத், தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே’’ சீவக. 493 - 501, 2223, 2231. எனவும் வருபவை இங்கே ஒப்புநோக்கற்பாலன.

2. (அ) ‘‘அஃதென்ப, பட்டினம் பெற்ற கலம்’’ நாலடி. 250. (ஆ) ‘‘ஊனமெனு மின்றியினி தோடுகவி தென்றான்’’ சீவக. 500.

3. ‘‘துணிகடற் சேர்ப்பன்’’ திணைமொழி. 47.

4. (அ) ‘‘இமிழ்குரன் முரச மூன்றுட னாளுந், தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே’’ புறம். 58 : 12 - 13. என்பதும் (ஆ) ‘‘அடையல ரொடுங்க மோதும் படைமுர சதிரு மோதை யிடைபடு வறுமையோட விடுகொடை முரசி னோதை கடைபடு வடிவேற் கண்ணார் கடிமண முரசி னோதை முடியுடை யரசர் வீதி யெங்கணு முழங்கக் கண்டார்’’ சீறு. கரம்பொருத்து. 27. என்பதும் நோக்குக.

(பிரதிபேதம்)1முரசுமூன்றாள்பவன், 2நிறீஇயாத்த, 3எ - து. முரைசு மூன்றாவன......மூன்றென்றலுமாம். முரைசு மூன்றை, 4கட்டின பாசறைபோலே என்ற.......கொடுத்து நின்றது. இருக்கைபோலே.