பக்கம் எண் :

826கலித்தொகை

இதன் பொருள்.

மாமலர் முண்டகந் (1) தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு 1சிறப்பினோன் மர2முதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
3பூமலர்ந் தவைபோலப் (2) புள்ளல்குந் துறைவகேள்

எ - து. 4கருமையையுடைத்தாகிய மலரையுடைய கழிமுள்ளி தில்லையோடே சேரச்சூழ்ந்தகானலிடத்துத் திரையிட்டமணன்மேலே காற்றாலுயர்ந்த


1. தில்லை, நெய்தனிலத்துக்கு உரித்தாகக் கூறப்படும் மரவகை. இது (அ) ‘‘நீர்நாய் கொழுமீன் மாந்தித் தில்லையம், பொதும்பிற் பள்ளி கொள்ளு மெல்லம் புலம்ப’’ (நற். 195 : 2 - 4.) (ஆ) ‘‘தில்லை வேலி யிவ்வூர்’’ (ஐங்குறு. 131) என்பவற்றாலும் அறியப்படும். இதன்றளிர் புற்கென்ற நிறமுடையதென்பதும் பன்முறை அருவி நீராடும் தாபதர்சடையினிறத்திற்கு உவமை கூறப்படுவதென்பதும் (இ) ‘‘கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து, தில்லையன்ன புல்லென் சடையோ, டள்ளிலைத் தாளி கொய்யு மோனே’’ (புறம். 252 : 1 - 3) என்பதனால் அறியப்படுகின்றன. (ஈ) ‘‘தில்லை பாலை’’ (குறிஞ்சி. 77) என்பதன் உரையில் தில்லை-தில்லைப்பூ என்று எழுதியிருத்தலால் இது பூவுடையதென்றும் தெரிகிறது. (உ) இதன்பால் மிக்க கொடுந்தன்மையுடையதென்பர். (ஊ) சிதம்பரம், இம்மரம் அடர்ந்த காடாயிருந்தது பற்றி, ‘தில்லை’ என்று பெயர்பெற்றதென்பர்.

2 ‘‘புள்ளிறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத், தாழை’’ அகம். 180 : 11 - 12.

3. (அ) ‘‘முள்ளிக், கொடுங்கான் மாமலர்’’ பெரும்பாண். 215 - 216. (ஆ) ‘‘கூர்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்” குறுந். 51. (இ) “கூர்முண் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, மீன்முள் ளன்ன வெண்கான் மாமலர்’’ அகம். 26 : 1 - 2. எனவும், (ஈ) ‘‘முண்டகங் கதிர்மணி கழாஅலவும்’’ சிறுபாண். 148. (உ) "மணிப்பூ முண்டகத்து" மது. 96. (ஊ) ‘‘மணிமருண் மலர முள்ளி’’ அகம். 236 : 1 எனவும் வருவனவற்றால், கழிமுள்ளிப்பூக் கருநிறமுடையதென்பதும் மற்றும் சிலவும் விளங்கும். இப்பூவை நெய்தனிலமகளிர் அணிவதுண்டென்ப; அது (எ) ‘‘அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை, மணிமரு ளைம்பால் வண்டுபடத் தைஇ’’ நற். 245 : 2 - 3. (ஏ) ‘‘முண்டகக் கோதை நனையத், தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின்றோளே’’ ஐங். 121.

(பிரதிபேதம்)1சிறப்பினான், 2முதலசைத்த, முதற்றகைத்த, முதற்றகைசேர்த்த, 3பூவலர்ந்தவை, 4கருமையுடைத்தாகிய.