மணலிலே 1உடனின்ற, புகழ்மிகுகின்ற தலைமையினையுடைய(1) தக்கணா மூர்த்திதேவர் தாமிருந்த (2) ஆலமரத்தே தாமிருப்பதற்குமுன்னே தூக்கிவைத்த நீர்நிறைந்த (3) குண்டிகை போலப் பழந்தூங்கும் முடத்தையுடைய (4) 2தாழைப்பூ அலர்ந்தவைபோலக் குருகினம் அத்தாழைமேலே தங்குந் துறைவனே! யான் கூறுகின்றதனைக்கேள், எ - று. முள்ளுடைய முண்டகமும் கொடிய தில்லையுமே சூழ்ந்த கானலைக் கொடிதாக அலர்கூறுகின்ற மகளிர் சூழ்ந்திருக்கின்றதாகவும் உயிர்க் கொலை சூழுங்குருகுகள் நன்றாகியதாழைமலர்போற் றோன்றுகின்றதனை எம்முயிர்க்கு வருத்தஞ்செய்கின்ற தலைவன் நன்மகனைப்போற் பிறர்க்குத் தோன்றுகின்ற தன்மையாகவும் உள்ளுறையுவமங்கொள்க. 6 ஆற்றுத லென்பதொன் 3றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை (5)பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுத லன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை
(ஐ) ‘‘முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்’’ புறம். 24 : 11.என்பவற்றால் அறியப்படுகிறது. இப்பூவின் காம்பினடியிற் சிறிது தேனுண்டு. இதன் முதலாகிய செடி கத்திரிவகையுளொன்றாகிய முள்ளியின் வேறென்றறிதற்பொருட்டுப் பெரும்பாலும் கழிமுள்ளியென்றே வழங்கப்படும்; (ஒ) கடன்முள்ளியென்றும் அருகிவழங்கும். இது மற்றை நீர் நிலைகளிலுமிருக்கும். 1. தக்ஷிணாமூர்த்தியென்பது தக்கணாமூர்த்தியெனச் சிதைந்து நின்றது. 2. இந்நூற் பக்கம் 494 : 2-ஆம் குறிப்பும் ‘‘ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்’’ என, தக்கணாமூர்த்தியென்போன் (சிலப். 23 : 91) கூறப்படுதலும் இங்கே அறிதற்பாலன. 3. தாழம்பழம் பலாப்பழத்தைப்போல முட்புறத்தையுடையது; கலயத்தினளவான பருமனையும் சுடுமட் கலம்போன்ற செந்நிறத்தையுமுடையதாதலால் இதற்கு, கமண்டலம் மெய்யானும் உருவானும் உவமம். இப்பழம், பயன்படாதவையென்று இகழப்படுபவற்றுள் ஒன்று. 4. இந்நூற் பக்கம் 811 : 7-ஆம் குறிப்புப் பார்க்க. 5 (அ) ‘பண்புடைமை - அஃதாவது பெருமைசான்றாண்மைகளிற் றாம்வழுவாது நின்றே எல்லாரியல்புகளுமறிந்து ஒத்தொழுகுதல்; ‘பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்’’ என்றார் பிறரும்’ என இவ்வடியை மேற்கோள்காட்டுவர் பரி; குறள். 100-ஆம் அதி. அவ. (பிரதிபேதம்)1உடனின்ற முடத்தாழைப்பூ ..................கூறுகின்றதனைக் கேள். புகழ மிகுகின்ற, 2தாழை என்க. முள்ளுடைமுண்டக, 3அலர்ந்தவர்க்கு
|