பக்கம் எண் :

828கலித்தொகை

யறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல்
செறிவெனப் படுவது கூறியது 1றாஅமை
(1) நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை
(2)முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்
(3) பொறையெனப் படுவது போற்றாரைப் 2பாறுத்தல்


(ஆ) ‘‘பாடறிந் தொழுகும் பண்பி னாரே’’ (புறம். 197 : 14) என்பது இதனோடு ஒப்புநோக்கற்பாலது.

1. ‘‘நிறையழிதல்:- அஃதாவது தலைமகள், மனத்தடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்கமாட்டாது வாய்விடுதல்’’ என்று கூறி, அதற்கு (குறள். 126-ம் ஆதி. அவ) பரிமேலழகரும் ‘‘நிறையாம்வரம்பு’’ என்புழி நிறை என்பதன்பொருளை விளக்குதற்கு, (தஞ்சை. 14. உரை) சொக்கப்ப நாவலரும் இவ்வடியை மேற்கோள்காட்டி யிருத்தலும், ‘‘நிறையிலன்’’ (குறள். 864) என்பதன் விசேடவுரையில்; நிறை-மறை பிறரறியாமை’ என்று பரிமேலழகரும்’ நிறையென்பது மறைபிறரறியாமை நெஞ்சினை நிறுத்தல்’ என்று (தொல். மெய்ப். சூ. 25 உரை) பேராசிரியரும் எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலன. இந்நூற் பக்கம் 419 : 6-ஆம் குறிப்பும் பார்க்க.

2. (அ) ‘‘நீமெய் கண்ட தீமை காணி, னொப்ப நாடி யத்தக வொறுத்தி’’ புறம். 10 : 3 - 4. (ஆ) ‘‘எங்கண் ணினைய ரெனக்கருதி னேதமாற், றங்கண்ண ரானுந் தகவில கண்டக்கால், வன்கண்ண னாகி யொறுக்க வொறுக்கல்லா, மென்கண்ண னாளா னரசு’’ பழ. 322. (இ) ‘‘ஓர்ந்து கண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந், தேர்ந்துசெய் வஃதே முறை’’ ஈ) ‘‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ், களைகட்டதனொடு நேர்’’ குறள். 541, 550. (உ) ‘‘எய்திய குற்றத்தோர்கள் யாவரா யினுங்கண்ணோடா, தைதென நாடி நீதி யறந்தலை பிழையாத் தண்டஞ், செய்தலே செங்கோலாகும்’’ விநயாக. அரசியற்கை. 88. என்பவைகளும் (ஊ) கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு’’ (குறள். 578) என்பதன் விசேடவுரையில், ‘‘தம்மொடுபயின்றார் பிறரை இடுக்கண்செய்துழி, அவரைக் கண்ணோடியொறாதார்க்கு முறைசிதைதல், மேல் ‘ஓர்ந்துகண் ணோடாது’ என்ற முறையிலக்கணத்தானும் பெற்றாம். முறை சிதையவரும்வழிக் கண்ணோடாமையும் வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கியல்பாதலருமையிற் கண்ணோடவல்லார்க் கென்றும் ................ கூறினார்’’ என்று எழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலன.

3. (அ) ‘மண்டிணிந்த நிலனும்.......போற்றார்ப் பொறுத்தலும்’’ புறம். 2 : 1 -7. (ஆ) வையா மாலையர் வசையுநர்க் கறுத்த, பகைவர் தேஎத் தாயினுஞ், சினவா யாகுத லிறும்பூதாற் பெரிதே’’ பதிற். 32 : 15 - 17.

(பிரதிபேதம்)1மறாமை, முறையெனப், 2பொறுத்தல், நிறையெனப், பொறுத்தல், ஆங்கதை