பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்829

எ - து. (1) இல்வாழ்க்கைநடத்துதல் என்று சொல்லுவது (2)மிடித்தவர்க்கு யாதானும்ஒன்றை உதவுதலை; ஒன்றைப் (3) பாதுகாத்தல் என்று சொல்லுவது கூடினாரைப் பிரியாதிருத்தலை; மக்கட்பண்பு என்று சொல்லப்படுவது உலகவொழுக்கம் அறிந்தொழுகுதலை; (4)அன்பு என்று சொல்லப்படுவது தன்சுற்றத்தைக் (5)கெடாதிருத்தலை; (6)அறிவு என்று சொல்லப்படுவது


(இ) ‘‘அகழ்வாரைத்தாங்கு நிலம்போலத் தம்மை, யிகழ்வார்ப் பொறுத்த றலை’’ (ஈ) ‘‘ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண்ணோடிப். பொறுத்தாற்றும் பண்பே தலை’’ குறள். 151, 579. (உ) ‘‘கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய்தாரைப், பொறுத்தாற்றிச் சேறல் புகழால்’’ பழ. 19..

1. ‘‘தானந்தவம்’’ என்னுங் குறளின் விசேடவுரையில் ‘பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின்மேலும் தவம் துறவறத்தின்மேலும் நின்றன’ என்று (குறள். 19) பரிமேலழகர் எழுதியிருப்பதும், ‘‘வறியார்க் கொன் றீவதே யீகைமற்றெல்லாங், குறியெதிர்ப்பைநீர துடைத்து’’ (குறள். 221) என்பதும் ஈண்டறிதற்பாலன.

2. அலத்தல் மிடியுறுதலென்னும்பொருளில்வருதலை, ‘‘அலத்தற் காலை’’ மணி. 15 : 50, 28 : 191. என வருதலாலும் அறிக.

3. ‘‘பொருள் போற்றி வழங்குநெறி’’ குறள். 477. என்புழி, போற்றி வழங்குதலென்பதற்கு, பேணிக்கொண்டொழுகுதலென்று உரையும், பேணிக்கொண் டொழுகுதலென்பதற்கு, (ஒருவரோடும் நட்பில்லாத அதனைத் தம்மோடு) நட்புண்டாக்கிக்கொண்ட டொழுகுதலென்று விசேடவுரையும் எழுதியிருப்பது இங்கே அறிதற்பாலது.

4. (அ) ‘‘தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்’’ புறம். 157 : 1. (ஆ) ‘‘நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட்ட டார்களைக், கண்கண்ட குற்றமுளவெனினுங் காய்ந்தீயார், பண்கொண்ட தீஞ்சொற் பணைத்தோளா யாருவரே, தங்கன்று சாக்கறப் பார்’’ பழ. 16.

5. ‘‘அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார், மறத்திற்கு மஃதே துணை’’ (குறள். 16.) என்பது இங்கே நோக்கற்பாலது.

6. (அ) ‘‘தெரியா தவர்தந் திறனில்சொற் கேட்டாற், பரியாதார்போல விருக்க’’ (ஆ) ‘‘ஆய்ந்த வறிவின ரல்லாதார் புல்லுரைக்குக், காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்’’ பழ. 135, 268. (இ) ‘‘வன்மையுள், வன்மை மடவார்ப் பொறை’’ குறள். 153. (ஈ) ‘‘எள்ளிப் பிறருரைக்கு மின்னாச்சொ றன்னெஞ்சிற், கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினு - மெள்ள, வறிவென்னு நீரா லவித்தொழுகலாற்றிற், பிறிதென்னும் வேண்டா தவம்’’ அறநெறி. 101.