அறியாதார் தன்னைப் 1பார்த்துச்சொல்லுஞ் சொல்லைப் பொறுத்தலை; (1) ஒருவரோடு ஒருவர்க்கு உறவுஎன்று கூறப்படுவது கூறியதொன்றைத் தாம் 2மறாதிருத்தலை; நிறைஎன்று சொல்லப்படுவது மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதலை; முறை என்று சொல்லப்படுவது (2) நமரென்று கண்ணோட்டஞ்செய்யாது அவர் செய்தகுறைக்கேற்ப அவர் உயிரைக்கொள்ளுதலை; (3) பொறை என்று சொல்லப்படுவது பகைவரைக் காலம் வருமளவும் 3பொறுத்திருத்தலை. எ - று. 15 4ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா 5லுண்பவர் கொள்கலம் 6 வரைத னின்றலை வருந்தியா டுயரஞ் சென்றனை களைமோ (4)பூண்கநின் 7றேரே எ - து. அப்படியே அக்குணத்தை நீரே அறிந்தொழுகினீராயின் அவ்வொழுக்கத்திற்கு ஏற்பது ஒன்று கூறுவேன்; கொண்க! என்றோழியது நன்னுதலின் நலத்தை நுகர்ந்து அவளைத் துறத்தல், இனியதாகிய பாலை
1. (அ) ‘‘தேறிய பாங்கியர் வெள்ளமுண் டாயினுந் தேமொழிநான், கீறிய கீற்றினை யுங்கட வாள்வண்டு கிண்டிமதுவூறிய கொன்றைய ராரூர்த் தியாக ருயர்சிலம்பிற், கூறிய வாறு மறாண்முடிப் பேனுன் குறையினையே’’ திருவாரூர்க்கோவை. 133. (ஆ) ‘‘பெம்மான் புகலியிற் சம்பந்தர் பால்வைத்த பேரருள்போ, லம்மான்விழியெம் முதல்வியென் பானல் லருள்பெரிய, ணம்மானச் சம்பந்தர் சொற்படி யாவு நடத்தினன்மற், றிம்மானென் சொற்படி யெல்லா நடத்து மியல்பினளே’’ சீகாழிக்கோவை. 153 2. ‘‘நமரெனக் கோல்கோடாது’’ புறம். 55 : 11. 3. (அ) ‘‘காலங் கருதி யிருப்பர் கலங்காது, ஞாலங் கருது பவர்’’ (ஆ) ‘‘பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த், துள்வேர்ப்ப ரொள்ளி யவர்’’ (இ) ‘‘செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை, காணிற் கிழக்காந் தலை’’ (ஈ) ‘‘எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே, செய்தற் கரிய செயல்’’ (உ) “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து’’ குறள். 485, 487, 488, 489, 490. (ஊ) ‘‘ஆண்டுநே ரெல்லையாக வவன்றிறத் தழற்சியின்மை, வேண்டுவலென்று சொன்னான் வில்வலா னதனை நேர்ந்தான்’’ சீவக. 393. 4. கலி. 126 : 20 - 22-ஆம் அடிகளும் அவற்றின் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்)1பாராது, 2மாறாதிருத்தலை, 3பொறுத்திறுத்தலை அப்படியே, 4ஆங்கறிந்தொழுகினை யாயினுமென், 5உண்பவர், உண்டோர், 6வரைதலினின்றலை வருந்தினயெரம், 7தேரே என்பது இல்வாழ்க்கை.
|