பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்831

யுண்ணுமவர்கள் பாலையுண்டு அதனைக்கொண்டிருக்குங் கலத்தைக் கவிழ்த்துவிடுதல் போல்வதொன்று; ஆகையினாலே, நின்னிடத்து வருந்தினவள் துயரத்தை வரைந்து சென்றனையாய்க் களைவாய்; அங்ஙனங் களைதற்கு நின் தேர் புரவியைப் பூண்பதாகவெனத் தெருட்டி வரைவுகடாயினாள். எ - று.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.

(1) இது தனிச்சொல்லின்றி ஆசிரியச் சுரிதகம் பெற்ற தரவிணைக் கொச்சகம். (16)

(134). மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்டா ரகலத்தோ
னொல்லாதா ருடன்றோட வுருத்துட னெறிதலிற்
கொல்யானை யணிநுத லழுத்திய வாழிபோற்
கல்சேர்புஞாயிறு கதிர்வாங்கி மறைதலி
னிருங்கடலொளித்தாங்கே யிரவுக்காண் பதுபோலப்
பெருங்கடலோதநீர் வீங்குபு கரைசேரப்
போஒய வண்டினாற்புல்லென்ற துறையவாய்ப்
பாயல்கொள் பவைபோலக்கயமலர் வாய்கூம்ப
வொருநிலையே நடுக்குற்றிவ் வுலகெலா மச்சுற
விருநிலம் பெயர்ப்பன்ன வெவ்வங்கூர் மருண்மாலை;
11 தவலினோய்செய்தவர்க் காணாமை நினைத்தலி
னிகலிடும்பனிதின வெவ்வத்து ளாழ்ந்தாங்கே
கவலைகொணெஞ்சினேன் கலுழ்தரக் கடனோக்கி
யவலமெய்க்கொண்டது போலுமஃ தெவன்கொலோ
15 நடுங்குநோய்செய்தவர் நல்காமை நினைத்தலிற்
கடும்பனிகைமிகக் கையாற்று ளாழ்ந்தாங்கே
நடுங்குநோயுழந்தவென் னலனழிய மணனோக்கி
யிடும்பைநோய்க்கிகுவன போலுமஃ தெவன்கொலோ;

1. (அ) இச்செய்யுள் இச்செய்திக்கே தொல். செய். சூ. 155. பேர். நச். உரைகளில் மேற்கோள். (ஆ) இளம்பூரணர்; ‘தாவின்றாகி’ என்னும் தொல். செய். 142 - ஆம் சூத்திரத்தினுரையில் இதனைக் கொச்சகவொருபோகு எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றி வருவதற்கு மேற்கோள் காட்டி முதற்பகுதியைத் தரவென்றும், இடைப்பகுதியை எண்ணென்றும், கடைப்பகுதியைச் சுரிதகமென்றும் விளக்கினர்.