பக்கம் எண் :

832கலித்தொகை

19 வையினர்நலனுண்டார் வாராமை நினைத்தலிற்
கையறு நெஞ்சினேன் கலக்கத்து ளாழ்ந்தாங்கே
மையல்கொ ணெஞ்சொடு மயக்கத்தான் மரனோக்கி
யெவ்வத்தா லியன்றபோ லிலைகூம்ப லெவன்கொலோ;
எனவாங்கு;
24 கரைகாணாப்பௌவத்துக் கலஞ்சிதைந் தாழ்பவன்
றிரைதரப்புணைபெற்றுத் தீதின்றி யுய்ந்தாங்கு
விரைவனர்காதலர் புகுதர
நிரைதொடி துயர நீங்கின்றால்விரைந்தே

இது பிரிவிடை மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி இவ்வகைப்பட்டனவும் நமதிடுக்கண்கண்டு எவ்வங்கொண்டன போன்ற; அவரும் நமக்கருளுவார் கொல்லோ, எனச்சொல்லிய நேரத்துக்கண் தலைவன் புக, 1அவ்வளவில் அவள் அவலம் நீங்கினமை கண்டு வாயில்கள் தம்முள்ளே கூறியது.

இதன் பொருள்.

மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்டா ரகலத்தோ
னொல்லாதா ருடன்றோட வருத்துட னெறிதலிற்
கொல்(1) யானை யணிநுத லழுத்திய வாழிபோற்
(2) கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலி
5 னிருங்கட லொலித்தாங்கே யிரவுக்காண் பதுபோலப்
பெருங்கட லோதநீர் வீங்குபு கரைசேரப்

1. (அ) ‘‘கன்னவில் கடகத் தோளான் கண்டுகை தொழுது கொண்டு, மின்னவிர் விளங்கு நேமி விடுத்தனன் விடுத்த லோடு, மன்னனை மார்புகீண்டு மணிமுடி யெறிந்து மற்றைப், பொன்னவி ரோடை யானைப் புகர்நுதற் புக்க தன்றே’’ (சூளா. அரசியல் 331.) எனவும் (ஆ) ‘‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி ,முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போ யெல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையு மதியம்போன், மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே’’, (யா - கா. உறுப்பியல், 11. மேற்கோள்) எனவும் யானை நுதலில் ஆழிபுகுதல் கூறப்படுதல் காண்க.

2. (அ) ‘‘படுசுடர் கல்சேர’’ (ஆ) ‘‘கனைசுடர் கல்சேர’’ (இ) ‘‘ஒண்சுடர் கல்சேர’’ (ஈ) ‘‘கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின்’’ கலி. 119 : 2, 120 : 3, 121 : 1, 142 : 37.

(பிரதிபேதம்)1அவ்வளவில் நீங்கினமை கண்டு.