போஒய வண்டினாற் புல்லென்ற துறையவாய்ப் (1) பாயல்கொள் பவைபோலக் கயமலர் வாய்கூம்ப வொருநிலையே நடுக்குற்றிவ் வுலகெலா மச்சுற விருநிலம் (2) பெயர்ப்பன்ன வெவ்வங்கூர் மருண்மாலை எ - து. (3) பகையாய் வந்த (4)மல்லரைமறத்தைக்கெடுத்த 1அலர்ந்ததண்ணிய தாரை அணிந்த திருமார்பையுடைய மாயவன், தன் பகைவர் எல்லாருஞ் சேரவந்து உருத்துத் தன்னை எறிகையினாலே, 2அவரை உடன்று அவர் ஓடும்படியாக அவர் ஏறின(5) கொல்யானையினது அழகினையுடைய மத்தகத்திலே அழுத்தின சக்கரம்போலே, ஞாயிறு தான் பரப்பிய கதிர்களைத்
1. (அ) ‘‘கண்பாயல் பெற்றபோற் கணைக்கால மலர்கூம்ப’’ (ஆ) ‘‘இம்மாலை, இருங்கழி மாமலர் கூம்ப’’ (கலி. 119 : 5; 130 : 11 - 12) என்பவையும் அவற்றின் குறிப்பும் நோக்குக. 2. (அ) ‘‘பல்லுருவம் பெயர்த்து’’ (ஆ) ‘‘பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல்’’ (கலி. 1 : 5; 129 : 2.) என்பவற்றில், பெயர்த்தலென்பதற்கு எழுதியிருக்கும் உரையும் பார்க்க. 3. பகையாய் வந்த மல்லரென்றது, கஞ்ச னேவலால் தன்னைக் கொல்ல வந்த சாணூரன் சலன் கவுசலன் முதலியவரை. 4. மல்லரை மறத்தைக் கெடுத்தலென்னு முடிபை, தொல். வேற்-மயங். 5 - ஆம் சூத்திரத்தின் இவருரை நோக்கித் தெளிக. 5. கொல்யானை என்னு மொழியிலுள்ள முதனிலை செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் பொதுவாய் நிற்கும். இந்நூலுள் முன்பு‘ “கொல்யானை நீர்க்குவிட் டாங்கு’’ (கலி. 16 : 32) எனச் செய்வினையிலும் ‘‘கொல்யானைக் கோட்டால் வெதிர்நெற் குறுவாம்’’ (கலி. 42 : 7) எனச் செயப்பாட்டு வினையிலும் வந்திருக்கிறது. ‘‘புலிகொல் யானை’’ என்பதற்கு, ‘புலியைக் கொன்ற யானை, புலியாற் கொல்லப்பட்ட யானை, புலியினிற் கொல்லப்பட்ட யானை’ என்று மயிலைநாதரும், ‘புலியைக் கொன்ற யானை, புலியானது கொன்ற யானை, புலியாற் கொல்லப்பட்ட யானை‘ என்று மற்றைய உரைகாரரும், (நன். பொது. சூ. 22 உரை) புலி கருத்தாவாகியும் கருமமாகியும் யானை கருத்தாவாகியும் கருமமாகியும் நிற்குமென்று சுப்பிரமணிய தீக்ஷிதரும் (பிரயோக. 15. உரை) எழுதியிருப்பவையும், ‘‘கொல்யானை என்பது அக்காலத்து அஃது உதிரக்கோட்டோடு வந்த தேல் இறப்பும், அதன்றொழிலைக் கண்டுநின்றுழி நிகழ்வும், அது கொல்ல ஓடுவதனைக் கண்டுழி எதிர்வும் விரியும், இனிக் கொல்யானை என்பதன்கண் இரண்டு ஈறும் ஒருங்கு தொக்குநின்ற தென்றற்கு (பிரதிபேதம்)1அலர்ந்த தாரை, 2அவன் அவரை.
|