பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்835

கவலைகொ ணெஞ்சினேன் கலுழ்தரக் (1) கடனோக்கி
யவலமெய்க் கொண்டது போலுமஃ தெவன்கொலோ

எ - து. எனக்குக் கேடில்லாத காமநோயைச் செய்தவரைக் கண்ணாற் காணாமல் என்னெஞ்சு நினைக்கையினாலே, அது தனக்கிடமாகக் 1கொண்டு மாறுபாடுகளைக்2கொடுக்கும் பனிக்காலம் அறிவைத்தின் றுவிட, 3அப்பொழுதே வருத்தத்திலே அழுந்திப் (2) பல நினைவுகொண்ட நெஞ்சினையுடைய யான் கலக்கத்தைத் தர, கடல் அதனை நோக்கி என்னுடைய இந்த அவலத்தைத் தன்னுடைய மெய்யிலே கொண்டதுபோலே கூப்பிடாநின்றதற்குக் காரணமென்னோதான். எ - று.

15 (3) நடுங்குநோய் செய்தவர் நல்காமை 4நினைத்தலிற்
கடும்பனி 5கைம்மிகக் கையாற்று ளாழ்ந்தாங்கே
நடுங்குநோ யுழந்தவென் னலனழிய மணனோக்கி
யிடும்பைநோய்க் (4)கிகுவன போலுமஃ தெவன்கொலோ

எ - து: எனக்கு நடுங்குகின்ற காமநோயைச் செய்தவர் என்னை அருளாதபடியாலே என் நெஞ்சு அவரை நினைக்கையினாலே, அதுகண்டு கடிய பனிக்காலம் கைம்மிக்குவர, 6அதுகண்டு அப்பொழுதே செயலறவிலேயான் அழுந்த, (5) மணற்குன்று அதனை நோக்கி நடுங்குகின்ற நோயிலே உழந்து என்னலத்தை இருந்திழந்தேனது (?) இடும்பையைத் தரும் நோய்க்குத் தான் கரைந்து 7தாழ்வனபோல இராநின்றதற்குக் காரணமென்னோதான், எ - று.

திரையால், மணற்குன்று கரைந்து வீழ்கின்றதனைக் கண்டு கூறினாள். ஆழ்ந்து, ஆழவென்க.


1. ‘‘பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கட, றூவறத் துறந்தனன் றுறைவனென் றவன்றிற, நோய்தெற வுழப்பார்க ணிமிழ்தியோ’’ (கலி. 129 : 8 - 10) என்பதும் இந் நூற்பக்கம் 800 : 3-ஆம் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

2. ‘‘பலநினைந் தினையும் பைத னெஞ்சி, னலமா னோயு ளுழக்குமென்றோழி’’ கலி. 126 : 19 - 20. 

3. ‘‘நடுங்கு நோய்’’ கலி. 127 : 7.

4. இகுதல் - தாழ்தல்; இற்றொழுகுதல், விழுதலென்னும் பொருளிலும் வரும்.

5. ‘‘குன்றுபோல் வாலெக்கர்’’ கலி. 127 : 6. 

(பிரதிபேதம்)1கொண்டுதன் மாறு, 2கெடுக்கும் பனிக்காலம் தம் அறிவைத், 3அப்பொழுதே அவ்வருத்தத்திலே, 4விடுத்தலிற், 5கைமிகக்கையாற்றாதாழ்ந்து. 6நடுங்குகின்றநோயிலேஉழந்து செயலறவிலே யான்அழுந்த மணற்குன்று அதனைநோக்கித் தந்நலத்தை இழந்திருந்தேனது, 7தாழ்வதுபோலே.