பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்837

1எ - து. கரைகாணாத நடுக்கடலிலே மரக்கலங் கெட்டு அழுந்துகின்றவன் திரை கொண்டுவந்துதர ஒரு தெப்பத்தைப் பெற்றுப் பின்பு தீதில்லையாய்ப் பிழைத்தாற்போல இவள்காதலர் விரைந்து புகுத இடும்பையாவதும் விரைந்துபோயிற்று; அதனைக்காணீரென வாயில்கள் தம்முள்ளே கூறினார். எ - று.

எனப்புகுதரவென்க. ஆல், அசை.

இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை பிறந்தது.

இஃது ஒத்தாழிசைக்கலி. (17)

(135). துணைபுணர்ந் தெழுதருந் தூநிற வலம்புரி
யிணைதிரண் மருப்பாக வெறிவளி பாகனா
வயிறிணி நெடுங்கத வமைத்தடைத் தணிகொண்ட
வெயிலிடு களிறேபோ லிடுமண னெடுங்கோட்டைப்
பயிறிரை நடுநன்னாட் பாய்ந்து றூஉந் துறைவகேள்;
கடிமலர்ப்புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத்
தொடிநெகிழ்ந்த தோளளாத் துறப்பாயான் மற்றுநின்
குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ;
ஆய்மலர்ப்புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை
நோய்மலிநிலையளாத் துறப்பாயான் மற்றுநின்
வாய்மைக்கட்பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ;
12 திகழ்மலர்ப்புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை
யிகழ்மலர்க்கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின்
புகழ்மைக்கட்பெரியதோர் புகராகிக் கிடவாதோ;
எனவாங்கு;
16 சொல்லக்கேட்டனை யாயின் வல்லே
யணிகிளர் நெடுவரை யலைக்குநின் னகலத்து
மணிகிள ராரந் தாரொடு துயல்வர
வுயங்கின ளுயிர்க்குமென் றோழிக்
கியங்கொலி நெடுந்திண்டேர் கடவுமதி விரைந்தே.

இது வரையாது வந்தொழுகுந் தலைவனைத் தோழி நெருங்கி வரைவு கடாயது.


(பிரதிபேதம்)1எ - து. எனவிவள் சொல்லாநிற்கக்கரை.