இதன் பொருள். துணைபுணர்ந் தெழுதருந் 1தூநிற (1) வலம்புரி யிணைதிரண் மருப்பாக வெறிவளி பாகனா
1. சங்கு, இடம்புரி, வலம்புரி சலஞ்சலம் பாஞ்சசன்னியமென நால்வகைப் படுமென்றும் அவை முறையே ஆயிரம் இப்பி ஆயிரமிடம்புரி ஆயிரம் வலம்புரி ஆயிரஞ் சலஞ்சலம் இவற்றாற் குழப்படுஞ் சிறப்பினவென்றும் நிகண்டுகள் கூறும். அவற்றுள் வலம்புரி (அ) ‘‘இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும், வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்’’ என்றும் (பெரும்பாண். 34-35) (ஆ) ‘‘வரிவளை சூழும் வலம்புரி’’ என்றும் (சீவக. 2103) சிறப்பித்துக்கூறப்படுகின்றது. (இ) இது பரதவர்களால் மூழ்கி எடுக்கப்படுவதென்பது ‘‘வலம்புரி மூழ்கிய வான்றிமிற் பரதவர்’’ என்பதனாலும் (அகம். 350 : 11.) துறையிடத்தே வந்து மேய்ந்து மணலில் உழுதலும் உண்டென்பது. (ஈ) ‘‘துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத தோற்றம்’’ என்பதனாலும் (சிலப். 7 : 8.) விளங்கும். இது பதினாறு மங்கலப் பொருள்களுள் ஒன்றாக (உ) ‘‘வலம்புரி வட்டமு மிலங்கொளிச் சங்கும்’’ என்று (பெருங். (2) 5 : 28) கூறப்படுகின்றது. (ஊ) இது கடவுளை அபிடேகித்தற்குச் சிறந்த கருவியாகக் கொள்ளப்படுகிறது. இதன் வடிவான ரேகை ஆடவர்கையிலிருப்பது உத்தமவிலக்கணமெனப்படும். அது (எ) ‘‘வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை, நீர்செல நிமிர்ந்த மா அல்’ எனவும் (முல்லை. 2 - 3) (ஏ) ‘‘வலம்புரி பொறித்த வண்கை மதவலி’’ (ஐ) ‘‘வலம்புரித் தடக்கையானே’’ எனவும் (சீவக. 204, 821.) (ஒ) ‘‘சங்கலேகையுஞ் சக்கரலேகையு, மங்கை யுள்ளன வையற் காதலாற், சங்க பாணியான் சக்க ராயுத, மங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே’’ (சூளா. குமார. 45) (ஓ) ‘‘சங்க நல்லி ரேகையைத் தடக்கை காட்டு மாற், பங்கயவி ரேகையைப் பாதங் காட்டுமா, லிங்கிவ னேழுல கோம்பும்’’ எனவும் (பாக. (9) பூரு. 17.) வருவனவற்றால் உரைத்தக்கது. பரதநூலுள் வலம்புரிக்கையென இதன் வடிவமாகக் காட்டும் கையொன்று கூறப்படும்; அதனை (ஒள) ‘‘வலம்புரிக் கையே வாய்ந்தகனிட்ட, னலந்திகழ் பெருவிர னயமுற நிமிர்ந்து, சுட்டுவிரன் முடங்கிச் சிறுவிர னடுவிரல், விட்டுநிமிர்ந் திறைஞ்சும் விதியிற்றென்று, கூறுவர் தொன்னூற் குறிப்புணர்ந்தோரே’’ என்னும் சிலப். மேற்கோளால் அறிக. பண்டைக்காலத்து இதன்வடிவமாக மகளிர் தலையணியொன்று இருந்ததென்பது (ஃ) ‘‘தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின் வைத்து’’ (முருகு. 23.) (அஅ) ‘‘தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி........மையீரோதிக்கு மாண்புற வணிந்து’’ (சிலப். 6 : 106 - 108) என்பவற்றாலும், செப்பு ஒன்று இருந்ததென்பது (பிரதிபேதம்)1தூய்நிற.
|