வயிறிணி நெடுங்கத 1வமைத்தடைத் தணிகொண்ட (1) 2வெயிலிடு களிறேபோ (2) லிடுமண னெடுங்கோட்டைப் பயிறிரை நடுநன்னாட் பாய்ந்துறூஉந் துறைவகேள் எ - து. வேல் தைத்துச் செறிந்த நெடிய கதவாகச் சமைத்து 3அதனால் அடைத்து அழகு கொண்ட எயிலைக்(3) குத்துங் களிறுபோலே (4)இடுமணலினதுநெடிய 4சிகரத்தைப்பயின்றதிரை, அலைக்கின்ற காற்றுப்பாகனாகத், துணையைக் கூடி எழுகின்ற (5)தூயநிறத்தையுடைய வலம்புரிகள் இணைந்த திரண்ட கொம்புகளாக, நடுநாட்கண்ணே குத்தி அவ்வியானைபோலே முழங்குந் துறைவனே! யான் கூறுகின்றதனைக் கேள். எ - று. ‘‘அயிற்கதவம்பாய்ந்துழக்கி’’ (6) என்றார்பிறரும் 5தன்னாற்பாதுகாக்கப்படுகின்ற மணற்குன்றைத் தானேகரைத்தாற்போல நின்னாற்பாதுகாக்கப்படுந்
(ஆஆ) ‘‘வலம்புரித் துலங்கு செப்பும்’’(சீவக. 2475) என்பதனாலும் அறியப்படுகின்றன. 1. (அ) ‘‘எயிறுபடையாக வெயிற்கத விடாஅக், கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற், பெருங்கை யானை’’ (புறம். 3 : 9 - 11.) என்பதும் (ஆ) ‘‘கடியரணம் பாயாநின் கைபுனை வேழம்’’ (கலி. 86 : 7) எனப்பொய்ம்மையானையைக் கூறியிருத்தலும் (இ) அதன் குறிப்பில் இவ்விடத்துக்கு ஒத்தனவும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. 2. ‘‘இவறுதிரை திளைக்கு மிடுமண னெடுங்கோடு’’ ஐங். 177. 3. ‘‘இடுமருப் பியானை’’ (கலி. 24 : 10) என்பதும் அதன் குறிப்பும் இங்கே அறிதற்பாலன. 4. இடுமணல்-(அலை கொண்டுவந்து) இட்டமணல்; எக்கரென வழங்கும்; இஃது ‘ ‘இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன்’’ (ஐந் - எழ. 59.) என எக்கருக்கு அடைமொழியாயும் வரும். 5. தூயநிறம் - வெண்ணிறம்; தூய வலம்புரி என்றலுமாம்; தூய்மை - சுத்தம்; அது தூயதென்பது ‘‘வலம்புரி முத்தே’’ என்பதற்கு, ‘மரபின்றூய்மை கூறுவான் வலம்புரி முத்தென்றான்’ என்றும் (சிலப். 2 : 73. அடியார்க்கு) ‘‘வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்’’ என்றும் (ஆத்திரையன்) ‘‘சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலு நங்குடி’’ (சீவக. 547) என்பதற்கு, ‘தடங்களிலே உடைந்த தன்மையவாகியமலரும் சங்கும்போலு நங்குடி; இது தூய்மைக்கு உவமை’ என்றும் தூயதற்கு உவமை கூறப்படுதலானும் துணியப்படும். 6. ‘‘அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்ன, ரெயிறிக்தவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட், பாய்தோய்ந்த நாவாய் போற் றோன்றுமே யெங்கோமான், காய்சினவேற் கிள்ளி களிறு’’ முத். (பிரதிபேதம்)1அடைத்தமைத்து, 2எயிலடு, 3அடைத்ததனால் அழகு, 4சாகரத்தை, 5தான்பாது.
|