தலைவியை நீதானே வருத்தாநின்றாய் என உள்ளுறையுவமங்கொள்க. களிறே போல் என்ற ஏனையுவமம் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது. 6 கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ்ந்த 1தோளளாத் துறப்பாயான் மற்றுநின் 2குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ எ - து. மணத்தையுடைத்தாகிய மலரினையுடைய புன்னைக்கீழ் நின்னைப் புணர்ந்ததனால் தன்னழகு தோற்றவளைத்(1) தொடியுட்பட நெகிழ்கின்ற தோளளாம்படி கைவிடுவாயாயிராநின்றாய்; அங்ஙனங் கைவிடுகின்றது. பின்னைநின் குடிமையிடத்துப் பெரியதொரு குற்றமாய்த் தங்காதோ. எ - று. | (2) குடிமை - ஒழுக்கம். | 9 | (3) ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலி 3நிலையளாத் துறப்பாயான் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ |
1. (அ) ‘‘தொடிபழி மறைத்தலிற் றோளுய்ந் தனவே’’ (ஆ) ‘‘தோட்பழி மறைக்கு முதவிப், போக்கில் பொலந்தொடி’’ (நற். 23 : 1, 136 : 8 - 9) என்பவைகளும், (இ) ‘‘தோடூக்க விப்பாற், பார்செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த’’ (சீவக, 469) என்பதன் விசேடவுரையில், ‘முன் வளைகழல நின்றார்க்கு வருத்தமிகுதியால் தொடியுங்கழன்றன’ என்று எழுதியிருத்தலும் இங்கே அறிதற்பாலன. 2. (அ) ‘‘பிறப்பே குடிமை’’ என்பதன் விசேடவுரையில் ‘குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்; குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமையென்றாரென்பது; அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப. ஆண்மை புருடர்க்கரம். அஃது ஆள்வினையெனப்படும். இது தலைமகட் கொப்பதன்றாலெனின், குடியாண்மை யென்புழி ஆண்மையென்பது இருபாற்கும்ஒக்குமாதலின் அமையுமென்பது’ என்று (தொல். மெய்ப். சூ. 25) பேராசிரியரும் (ஆ) ‘குடிமை: அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை’ என்று (குறள். 96-ஆம் அதி அவ) பரிமேலழகரும் (இ) ‘‘குடிமையாவது குடிப்பிறப்பிற்கேற்ற ஒழுக்கம். அஃது ‘ஒழுக்கமுடைமை குடிமை’ என்றதனான் உணர்க. ‘மடிமை குடிமைக்கட்டங்கின்’ என உயர்திணையிருபாலையும் உணர்த்திற்று’’ என்று (தொல். கிளவி. சூ. 57) இவ்வுரையாசிரியரும் எழுதியிருப்பவை இங்கே அறிதற்பாலன. 3. ‘‘ஆய்மலர்ப் புன்னை யணிநிழற் கீழால்’’ மணி. 25 : 169. (பிரதிபேதம்)1தோளாளாய்த், 2குடிமைக்கீட்பெரிய, 3நிலையளாய்த்.
|