பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்841

எ - து: நன்றென்று ஆய்ந்த மலரையுடைய புன்னைக்கீழ் நின்னைப் புணர்ந்ததனால் தன் அழகையுடையநலந்தோற்றவளைக் காமநோய் மிகுகின்ற நிலைமையளாகக் 1கைவிடுவாயா யிராநின்றாய்; அங்ஙனங் கைவிடுகின்றது பின்னை நின் மெய்கூறுதற்கட் பெரியதோர் பொய்யாய்த்தங்காதோ. எ - று.

மெய், (1) நின்னிற்பிரியேனெனத் தெளிவித்தது.

12 திகழ்மலர்ப் (2) புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை
2யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின்
புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ

எ - து: விளங்குகின்ற மலரையுடைய புன்னைக்கீழ் நின்னைப் புணர்ந்ததனால் திருவினலம்போன்ற நலத்தைத்தோற்றவளை (3) முன்புதோற்றமலர்கள் தாம் இகழ்கின்ற கண்ணையுடையளாம்படி கைவிடுவாயா யிராநின்றாய்; அங்ஙனங் கைவிடுகின்றது 3பின்னை நின்னைப் புகழ்ந்து கூறுந் தன்மையிடத்துப் பெரியதோர் குற்றமாய்த் தங்காதோ. எ - று.

எனவாங்கு, ஆங்கு அசை.

16 சொல்லக் கேட்டனை யாயின் வல்லே
யணிகிளர் நெடுவரை யலைக்குநின் னகலத்து
(4) மணிகிள ராரந் தாரொடு துயல்வர
(5)வுயங்கின ளுயிர்க்குமென் (6)றோழிக்
கியங்கொலி நெடுந்திண்டேர் கடவுமதி விரைந்தே


1. ‘‘நின்னிற் பிரியலே னஞ்சலோம் பென்னு, நன்னர் மொழியு நீமொழிந் தனையே’’ கலி. 21 : 7 - 8. 

2. புன்னையைப்பற்றிய செய்திகள் அடுத்த செய்யுளில் 13-ஆம் அடிக் குறிப்பாகக் குறிக்கப்படும்.

3. ‘‘நறுமலர் நாணின கண்’’ என்பதற்கு, ‘நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன’ என்று எழுதியிருக்கும் உரை ஈண்டறிதற்பாலது; குறள். 1231. பரி.

4, ‘‘தெண்மணி யார மார்பன் றிருநுதன் மகளிர் நெஞ்சத், துண்ணிறை பருகும் வண்டா ருருவமை திருவின் மிக்கான்’’ (சீவக. 695) என்பதன் உரைபார்க்க.

5. “உயங்க மாலை யுதவினன் வஞ்சிக்கே’’ தில்லைக் கலம்பகம். 14.

6. கலி. 30 : 18 - 19, 124 : 19 - 21, 126 : 20 - 22, 133 : 18 - 19, 136 : 21-ஆம் அடிகளும் அவற்றிலுள்ள குறிப்புக்களும் இங்கே அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1கைவிடுவையாய், 2துகழ்மலர்க், 3பின்னைப்புகழ்ந்து.