13 | நறுவீதாழ்புன்னைக்கீழ் நயந்துநீ யளித்தக்கான் மறுவித்தமிட்டவன் மனம்போல நந்தியா ளறிவித்துநீநீங்கக் கருதியாய்க் கப்பொருள் சிறுவித்த மிட்டான்போற் செறிதுய ருழப்பவோ; ஆங்கு; | 18 | கொண்டுபலர்தூற்றுங் கௌவை யஞ்சாய் தீண்டற் கருளித் திறனறிந்தெழீஇப் பாண்டியஞ் செய்வான் பொருளினு மீண்டுகவிவணல மேறுக தேரே. |
இது வரைவிடை வைத்துப் பிரியக்கருதிய தலைவனைத் தோழி தலைவி யாற்றுமை கூறிச் செலவுவிலக்கி வரைவுகடாயது. இதன் பொருள். (1) இவர்திமி லெறிதிரை யீண்டிவந் தலைத்தக்கா (2) லுவறுநீ ருயரெக்க ரலவனா டளைவரித் தவலிறண் கழகத்துத் தவிராது வட்டிப்பக் கவறுற்ற வடுவேய்க்குங் காமர்பூங் கடற்சேர்ப்ப எ - து: பரக்கின்ற, மீன்பிடிக்குந் திமிலையுடைய, எறியுந்திரைகள் திரண்டுவந்து அலைக்க, ஊறுகின்ற நீரையுடைய உயர்ந்த இடுமணலிடத்து அளையினின்றும் போந்து விளையாடித் திரியும் புள்ளிகளையுடைய அலவன் (3)
1. இவர்தலென்பது இவறுதலெனவும் அருகிவழங்கும்; ‘‘இவறுதிரை” என்பது ஐங். 177; ஒளிர்தல், ஒளிறுதலென வழங்குவதும் நோக்குக. 2. உவறுதல் - ஊறுதலென்னும் பொருட்டாய், (அ) ‘‘உவறுநீ ருழக்கி’’ என்று (சீவக. 966.) செயப்படுபொருள் குன்றிய வினையாய் வருதலன்றியும், (ஆ) ஊறச் செய்தலென்னும் பொருட்டாய், ‘‘ஒண்செங்குருதி யுவறியுண்டு’’ என்று (அகம். 3 : 8) செயப்படுபொருள் குன்றாவினையாயும்வந்துள்ளது; உவறுதலென்பதே ஊறுதலென மருவிற்றுப் போலும். 3. (அ) ‘‘இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோல்’’ குறள். 940. (ஆ) ‘‘காமரு சூதால்’’ (இ) ‘‘அண்டரும் விரும்பும் வன்சூ தாடுதும்’’ (ஈ) ‘‘பார்கொடுத்து மரசுகூர்ப தங்கொடுத்து முரியதம், மூர்கொடுத்து மதனினுள்ள மொழிவுறாம லோடவே’’ வில்லி. சூதுபோர்ச். 26, 28, 178.
|