பக்கம் எண் :

844கலித்தொகை

மன வேட்கை கெடுத்தலில்லாத, (1) தண்ணிதென்று நீக்கின சூதுபொருகின்ற இடத்தே வடுவுற்ற (2) கவற்றினை வேட்கை தவிராதே (3) உருட்ட அக்கவற்றை ஒக்கும் விருப்பமருவின பொலிவினையுடைய கடற்சேர்ப்பனே! எ - று.

அளை - முழை; 1வரி - புள்ளி. ‘‘புள்ளிக்களவன்’’ (4)என்றார் பிறரும்.


1. (அ) ‘‘அறத்தைவேர் கல்லு மருநரகிற் சேர்க்குந், திறத்தையே கொண்டருளைத் தேய்க்கு - மறத்தையே, பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்க, டீண்டுவரோ வென்றார் தெரிந்து’’ (ஆ) ‘‘உருவழிக்கு முண்மை யுயர்வழிக்கும் வண்மைத், திருவழிக்கு மானஞ் சிதைக்கு - மருவு, மொருவரோ டன்பழிக்கு மொன்றல்ல சூது, பொருவரோ தக்கோர் புரிந்து’’ நள. கலிதொடர். 38, 39. (இ) ‘‘அடியு மாண்மையும் வலிமையுஞ் சேனையு மழகும்வென் றியுந்தத்தங், குடியு மானமுஞ் செல்வமும் பெருமையுங் குலமுமின் பமுந்தேசும், படியு மாமறை யொழுக்கமும் புகழுமுன் பயின்றகல் வியுஞ்சேர, மடியு மான்மதி யுணர்ந்தவர் சூதின்மேல் வைப்பரோ மனம் வையார்’’ (ஈ) ‘‘மேதகத்தெரி ஞானநூற் - புலவரும் வேத்துநூ லறிந்தோரும், பாதகத்திலொன் றென்னவே முன்னமே பலபடப் பழித்திட்டார், தீதகப்படு புன்றொழிலிளைஞரிற் சிந்தனை சிறிதின்றித், தோதகத்துட னென்னையோ சகுனிதன் சூதினுக் கெதிரென்றான்’’ (உ) ‘‘கொடியவெஞ், சூதெடுத்து விழைதலுற்ற சூள்பிழைத்த லின்னவே, தீதெடுத்த நூலின் முன்பு தீயவென்று செப்பினார்’’ வில்லி. சூது. 65, 67, 162.

2. கவறென்பது, சூதாட்டத்திற் குலுக்கிப் போகடப்படுங் கருவி; பண்டைக்காலத்து விபீதகக் கொட்டையையே இக்கருவியாகக்கொண்டு மூன்றைம்பது கொட்டைகளைக் குலுக்கிப்போகட்டு நிலத்திற் குழி குழித்து அக்குழிகளில் நாயென்னும் வல்லுக்களை யிட்டு ஆடின ரென்றும் நளன் தருமன் முதலியவர் ஆடியகாலத்து, சோகி அல்லது சோழியென்றும் பறையலகு அல்லது பலகறையென்றும் கூறப்படும் கடல்விளைபொருளையேகவறாகக் கொண்டு ஆறுகவறுருட்டிஆடிவந்தனரென்றும், பிற்காலத்து அவற்றாலறியக்கூடிய எண்களை இரண்டு பாச்சிகைகளால் அறியும்படி அமைத்துக்கொண்டு அப்பாச்சிகைகளால் ஆடி வந்தனரென்றும் கூறுவர். இச்செய்யுளினுரையில் ஈரைந்து ஈரிரண்டு இருமூன்று என்றவழக்கே காணப்படுகிறது. இந்நாட்டில் சொக்கட்டானென்றும் தாயக்கட்டமென்றும் பத்துக்கட்டமென்றும் வழங்கும் பலவகை யாட்டமும் இதன் வழி வந்தனவென்பர்.

3. சீவக. 927. விசேடவுரையில் ‘உழக்கு - பிடித்துப்போகடாமற் கவறிட்டு உருட்டு முழக்கு’ என்று எழுதியிருத்தலால், கவறாடலில் கையாற்பிடித்துப் போகடுதலும் உழக்கிலிட்டு உருட்டலுமென இருவகை முன்பிருந்தமை அறியப்படும்.

4. கலி. 88 : 10.

(பிரதிபேதம்)1வரி புள்ளிக்களலனென்றார்