(1)தண்கழகம் ஈண்டுக் குளிர்ச்சியை உணர்த்தாது ‘‘தண்பொன்’’ என்றாற்போல இழிவை உணர்த்திநின்றது. அத்துறைக்கு உரியவாய் இயல்பாகச் சிறப்பு நிகழும்படி ஆடித் திரியும் புள்ளியையுடைய அலவன் (2) கண்களையுடைய (3) உருண்ட கவற்றை உருட்ட அக்கவற்றை ஒக்கும் என்றதனால் உலகியல்வழக்காகிப் பின்பு இல்லறம் நிகழுங் களவொழுக்கம் இவ்வூரிலுள்ளார்க்கு இழிந்த தொழிலுமாய்த் தோன்றாநின்றதென உள்ளுறையுவமங்கொள்க. ‘‘பலகை செம்பொ னாகப் பளிங்கு நாயாப் பரப்பி, 1யலவ னாடு மவைபோ லரும்பொற்கவறங் குருளக், 2குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி, யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின்’’ என்னுஞ் (4)சிந்தாமணியாலும் இதுவே பொருளாதல் உணர்க. 5 முத்துறழ் மணலெக்க ரளித்தக்கான் முன்(5)னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியா ளத்திறத்து நீநீங்க வணிவாடி யவ்வாயம் வித்தத்தாற் றோற்றன்போல் (6)வெய்துய ருழப்பவோ
1. இக்கழகம் நூல்களும் படைக்கலமும் பயிலிடம்போலச் சிறந்ததன்றாதலின்; ‘தண்கழகம்’ என்றார்; தண்ணென்பது இழிவை யுணர்த்தி வருமென்பது (அ) ‘‘கூழுடைக் கொழுமஞ்சிகைத், தாழுடைத் தண்பணியத்து’’ என்புழி, ‘‘தண்பணியத்து’’ என்பதற்கு, ‘நெல்லுப்போல ஏனைப்பண்டங்கள் சிறந்தன அன்மையின், தண்ணிய பண்டமென்றார்’ என்று (பட். 163 - 164) எழுதியிருக்கும் விளக்கத்தாலும் (ஆ) ‘‘மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின், சாயற் கிடைந்து தண்கா னடையவும்’’ என்புழி, ‘‘தண்கான்’’ என்பதற்கு, இழிந்தகாடு என்று (சிலப். 2 : 53 - 54. அடியார்க்கு) எழுதியிருக்கும் குறிப்பாலும் (இ) இழிந்த சமயத்தவன், ‘‘தண்ணிய சமயி’’ என்று கூறப்படுதலாலும் உணரப்படும். 2. கண்களால் இஃது அக்ஷமென்று பெயர்பெற்றதென்பர். 3. (அ) ‘‘உருளாயம்’’ குறள். 933; சீவக. 2873. (ஆ) ‘‘உருளாயச் சூதாடி’’ பெரிய. மூர்க்க. 8. (இ) ‘‘தப்பிலாத கவறுருண்ட தாயம்’’ வில்லி. சூது. 164. 4. சீவக. 927. 5. (அ) ‘‘ஆயங்கொளின்’’ குறள். 936. (ஆ) ‘‘ஆயம் பிடித்தாரும்’’ நள. கலிதொடர். 40. 6. வெய்துதுயர், வெய்துயரென மருவிற்று; (அ) ‘‘தழங்குரன் முரசு’’ (ஆ) ‘‘குலையலங் காந்தள்’’ என்பவைபோல, வெந்துய ரெனற்பாலது வெய்துயரென அருகி வந்ததெனினுமாம்; (பிரதிபேதம்)1அலவனாடும்வகைபோல் என்பது அந்நூலிலுள்ள பாடம், 2குலவுபவழ.
|