பக்கம் எண் :

846கலித்தொகை

எ - து: முத்தையொக்கும் எக்கராகிய மணலிலே நீகூட (2) முற்பட இடுகின்ற தாயம் முன்னை மனைகட்டலாம்படி கவற்றாலே (3) ஈரைந்தைப் பெற்றவனுடைய மனம்போல ஆக்கம் பெருகினவள், அங்ஙனம் அளிக்குங் கூற்றினின்று நீ நீங்குகையினாலே அப்பெருந் தாயமின்றி ஈரிரண்டு இருமூன்று என்னுஞ் சிறுதாயம் இடுதலால் தோற்றவனைப் போலே அழகுகெட்டு வெய்தாகிய வருத்தத்திலே அழுந்தவோ? எ - று.

உருவம் என்றது கவற்றை.

9 முடத்தாழை முடுக்கரு ளளித்தக்கால் வித்தாய
மிடைத்தங்கக் கண்டவன் மனம்போல நந்தியாள்
கொடைத்தக்காய் நீயாயி னெறியல்லாக் கதியோடி
யுடைப்பொதி 1யிழந்தான்போ லுறுதுய ருழப்பவோ

எ - து: முடத்தையுடைய(4)தாழை முடுக்குக்குள்ளே நி கூடப் போரிடையிலேசிறுதாயம்(5)இடவேண்டின அளவிலேசிறுதாயம் தங்கக்கண்டவனுடைய மனம்போலே ஆக்கம்பெருகினவள், சுற்றத்தார்க்குப் பொருளைக் கொடுத்து வரைந்துகோடற்குத் தக்கவனே! நீ முன்பே பொருளைத்


(இ) ‘‘செய்த செய்தவன்’’ (ஈ) ‘‘செய்த செய்தவம்’’ (உ) ‘‘செய்த செய்தவச் செல்வன்’’ என்ற கம்பர். ஆட்சிகள் இதுபோல்வன.

1. (அ) ‘‘முத்தவார்மணல்’’ பெரும்பாண். 335; புறம். 53 : 1 (ஆ) ‘‘முத்து மணல் வீதி’’ (இ) ‘‘முத்துமணற் பரந்த நற்பெருங் கோயின், முற்றந் தோறும்’’ பெருங். (2) 7 : 142, (5) 6 : 41 - 42.

2. சூதுபோரில் முற்பட ஒன்று விழுவதற்குத் தாயமென்று பெயரென்றும் அது விழுந்தபின்பே காய் பெயர்த்து மனைகட்ட உரிமையுண்டென்றும் கூறுவர். இது, பின்பு இவ்வாட்டத்தில் வேண்டும் எண்களைக் குறிப்பதாகவும் வழங்குகிறதுபோலும்.

3. வடநாட்டில் ஹாரே (தோற்பேன்) என்றும் ஜீதே (வெல்வேன்) என்றும் கூறி அவ்வாறே செய்பவர் எதிர்பொருவோர் வைத்த பந்தயப் பொருளைப்பெறுவரென்ப. இஃது அவ்வழக்கானால் இங்கே கூறியது, ‘வெல்வேன்’ ‘வெல்வேன்’ என்று முரணிய இருவர் செய்தியாம். ஒற்றை விழுதல் தோல்வியென்றும் இரட்டை விழுதல் வெற்றியென்றும் கூறுவர்.

4. தாழையின் இயல்பை இந்நூற்பக்கம் 811 : 7-ஆம் குறிப்பிற்காண்க.

5. ‘‘மாய முற்ற கவறு மந்த மாமன் வல்ல பத்திலே, தாய முற்றி டங்கொ டாது தரும னைச்ச தித்ததே’’ ‘‘இன்ன தாயம் வேண்டு மென்றெறிந்த போது மற்றவன், சொன்ன தாய மேபுரண்டு சோர்விலாமல் வருதலின்’’
வில்லி. சூதுபோர். 188 - 189.

(பிரதிபேதம்)1அவிழ்ந்தான்போல்