பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்847

தேடாதே இப்பொழுது பொருள்வயிற் பிரிவை ஆராய்ந்து பார்ப்பாயாயிற் சிறுதாயஞ்சிறுக இடவேண்டுமளவில் இடாமற் பெருக இட்டு வெல்லும் நெறியல்லாத நெறியிலே சூதுபொருகையினாலே அதற்கென்று கட்டிவைத்த தன்னுடைய (1) பொருளை இழந்தவனைப் போலே மிக்க துயரிலே அழுந்தவோ. எ - று.

13 நறுவீதாழ் (2) புன்னைக்கீழ் நயந்துநீ யளித்தக்கான்
மறுவித்த மிட்டவன் மனம்போல நந்தியா


1. கவறாடிப் பொருளையிழந்தவன் துயருற்று அதனைப் பழித்த செய்தி இருக்கு வேதமுதலியவற்றிலும் கூறப்பட்டுள்ளதென்பர்.

2. புன்னை, நெய்தனிலத்துக்கு உரித்தாகவும் கடற்கரையாகிய மணலில் கடற்றிவலையால் தழைத்து வளர்வதாகவும் கூறப்படுவதொரு மரம். இது பருத்ததும் வளைந்ததும் நீண்டதும் கரியதுமன அடியையும் கரியனவும் நெடியனவும் குறியனவுமான கொம்புகளையும் உடையதாகக் கூறப்படுகிறது. இதன் கொம்பு பசுநிற முடையதென்றும் சொல்லப்படும். அக்கொம்பிற்கு இரும்பு உவமையாகச் சொல்லப்படுகிறது. இம்மரத்தில் பரதவர் அம்பி முதலியவற்றைக் கட்டிவைத்தலும் இம்மரத்தின்மேல் ஏறி நெடுந்தூரத்தே வரும் மரக்கலங்களைப் பார்ப்பதும் மீன் உண்ணவந்த பறவைகள் இதன்மேல் தங்கி இருப்பதும் இயல்பு. இது மகளிர் நறவு கொப்புளித்தலாற் பூப்பதென்றும் ஆடுதலாற் பூப்பதென்றும் சொல்லப்படுகிறது. இம்மரத்தொகுதி பொழிலென்று கூறப்படும். இதன் இலை நீலநிறமும் அகலமும்உடையது. இது கொத்துக்கொத்தாகப்பூக்கும் இயல்பினது. இதன் அரும்பு நீண்ட காம்பும் உருண்ட தலையும் மங்கலான வெண்ணிறமு முள்ளது. இந்நிறத்தாலும் உருட்சியாலும் இதற்கு மண்ணாமுத்தும் பல்லி முட்டையும் சங்குமணியும் விண்மீனும் உவமையாகக் கூறப்படுகின்றன. இவ்வரும்பு வெண்ணிறத்தையும் தன்னுட் பொன்னிறமும் செந்நிறமுமுள்ள உறுப்புக்களையும் உடையதாயிருத்தலால் இது பொன்னையும் பவழத்தையும் உள்ளடக்கிய முத்தென்று புனைந்துரைக்கப்படுகிறது. இதன்பூவும் இவ்வாறே சொல்லப்படும். இப்பூவை மக்கள் அணிவதுண்டு. இப்பூ நறுமணமுடைமையால் இதில் வண்டுமுரன்று தாதுண்டுகொண் டிருக்கும். இதன் போதவிழ் நிலைக்கு ஊர்க்குருவியின் உடைந்த முட்டை உவமையாக்கப்பட்டுள்ளது. இதன் தாது பொன்னிறமுடையது; முப்பத்திருவகை ஓமாலிகைப் பொருள்களுள் ஒன்றாகவுள்ளது. இதனிழல் புகர்நிழலென்று பலவிடத்தும் கொழுநிழலென்று சிலவிடத்தும் கூறப்படுகிறது. கொழுநிழலுள்ள இம்மரத்தினடியில் மன்றம் அமைப்பர் போலும். இவையும் இம்மரத்தைப்பற்றிய வேறு சிலவும் அடியிலுள்ளவற்றால் அறியலாகும்;