பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்849

எ - து: நறியதாகிய பூத்தங்கின புன்னைக்கீழே நீ விரும்பிக்கூட இருசாற் (1) சிறுதாயம் இடவேண்டின அளவிலே ஒருகாலன்றியே இருகாலாவதும்


பசுமுத்தேய்ப்பக் குவியிணர்ப், புன்னை யரும்பிய புலவுநீர்ச் சேர்ப்ப’’ (35) ‘‘பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை’’ (36) ‘‘பல்லி, நெரித்த சினைபோலு நீளிரும் புன்னைப், பொரிப்பூ விதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப’’ (37) ‘‘புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்ட’’ (38) ‘‘வெண்முத்தரும்பிப் பசும்பொன் மலர்ந்து, கடைந்தசெம் பவளத்தொத்துடன் காட்டு, மிரும்புகவைத் தன்ன கருங்கோட்டுப் புன்னை’’ (39) ‘‘பவழமும் பொன்னுங் குவைஇய முத்திற், றிகழரும் பீன்றது புன்னை’’ (40) ‘‘முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்த்துத், தொத்தலருங் கானற் றுறையேம்’’ (41) ‘‘படுமுத்தம் புன்னை யரும்பும் புகாஅர்’’ (42) ‘‘புன்னைகண் முத்தென வரும்ப’’ (43) ‘‘புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே’’ (44) ‘‘புன்னைவெண் கிழியிற் பவளம் புரை பூந்தராய் (45) ‘‘ஒள்ளொளிப் பவளத் துள்ளொளி யடக்கி, வெள்ளிப் பூந்தா ரெள்ளுந் தோற்றத்துப், போதுபொறை யாற்றாப் புன்னையம் பொதும்பர்’’ (46) ‘‘புன்னை, பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை’’ (47) ‘‘தூமலர்ப் புன்னை’’ (48) ‘‘தூவற் கலித்ததேம்பாய் புன்னை, மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்’’ (49) ‘‘கருங்கோட்டுப் புன்னை மலரிற் றாதருந்தி, யிருங்களிப் பிரச மூத’’ (50) ‘‘கருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை மிசைதொறுஞ், சுரும்பார்க்குங் குரலினோ டிருந்தும்பி யியைபூத’’ (51) ‘‘உள்ளூர்க்குரீஇக் கருவுடைத் தன்ன, பெரும்போதவிழ்ந்த கருந்தாட்புன்னை’’ (52) ‘‘புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல், பொன்படு மணியிற் பொற்பத் தோன்று, மெல்லம் புலம்பன்” (53) ‘‘பொன்னேர் நுண்டாது புன்னைதூஉம்’’ (54) “பொன்னேர் தாதிற் புன்னையொடு” (55) ‘‘புன்னை பொன்றா துதிர்மல்கு மந்தண் புகலிந் நகர்’’ (56) ‘‘புன்னைநன்மாமலர் பொன்னுதிர்க்கும்புனவாயிலே’’ (57) ‘‘பொன்னினன்ன புன்னை நுண்டாது’’ (58) ‘‘புன்னை நறுமலரின் பூந்தா திடையொதுங்குங், கன்னி யிளமேதிக் காற்குளம்பு-பொன்னுரைத்த, கல்லேய்க்கு நாடன்’’ (59) ‘‘புன்னை நறுந் தாது......கதிர்நகையாயோமாலி கை’’ (60) ‘‘இன்னிணர்ப் புன்னையம் புகர் நிழல்’’ (61) ‘‘கடன்மீன் றந்து கானற் குவைஇ, யோங்கிரும் புன்னை வரிநிழலிருந்து, தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப், பெரிய மகிழுந்துறைவன்’’ (61) ‘‘நீனிறப் புன்னைக் கொழுநில லசைஇ’’ (62) ‘‘மன்றப் புன்னை மாச்சினை நறுவீ’’ (63) ‘‘மன்றத்துப் புன்னைபோல’’

1. வித்தம் - சிறுதாயமென்னும் பொருளில் இச்செய்யுளில் முன்னும் வந்துள்ளது; இது கவறாடலின் வழி வந்த ஆட்டங்களில் 'வருத்தம்’