பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்851

வில்லினா னெய்தலோ விலர்ம னாயிழை
வில்லினுங் கடிதவர் சொல்லினுட் பிறந்தநோய்;
13  நகைமுத லாக நட்பினு ளெழுந்த
தகைமையி னலித லல்ல தவர்நம்மை
வகைமையி னெழுந்த தொன்முரண் முதலாகப்
பகைமையி னலிதலோ விலர்ம னாயிழை
பகைமையிற் கடிதவர் தகைமையி னலியுநோய்;
18  நீயலே னென்றென்னை யன்பினாற் பிணித்துத்தஞ்
சாயலிற் சுடுத லல்ல தவர்நம்மைப்
பாயிரு ளறநீக்கு நோய்தபு நெடுஞ்சுடர்த்
தீயினாற் சுடுதலோ விலர்ம னாயிழை
தீயினுங் கடிதவர் சாயலிற் கனலுநோய்;
ஆங்கு;
24 அன்னர் காதல ராக வவர்நமக்
கின்னுயிர் போத்தரு மருத்துவ ராயின்
யாங்கா வதுகொ றோழி யெனையதூஉந்
தாங்குதல் வலித்தன் றாயி
னீங்கரி துற்றன்றவ ருறீஇய நோயே.

இது வரைவுநீட ஆற்றாளாயின இடத்துத் தலைவி யாற்றுமையை அவடன்னானே தலைவற்கு அறிவிக்கலுற்ற தோழி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியை வற்புறுக்க, அவள் 1வன்புறை எதிரழிந்து கூறியது.

இதன் பொருள்

அரிதே தோழிநா ணிறுப்பாமென் றுணர்தல்
(1) பெரிதே காமமென் னுயிர்தவச் சிறிதே
(2) பலவே யாமம் பையுளு முடைய
சிலவே 2நம்மோ டுசாவு (3) மன்றி


1. ‘‘இவளுயிர்’’ தவச்சிறிது காமமோ பெரிதே’’ குறுந். 18.

2. ‘‘ஊழி பலவோ ரிரவாயிற் றோவென்னும்’’ நள. சுயம். 108.

3. அன்றிலின் இயல்பு இந்நூற்பக்கம் 801 : 3-ஆம் குறிப்பால் அறியலாகும்.

(பிரதிபேதம்)1வன்பொறை, 2எம்மோடு.