ஆயிழாய் ! அவர் ஆண்டுச் 1செய்த காமநோய் கெடுதற்குக் காரணமான 2மென்மையால்நின்று எரியுங்காமநோய் தீயினுங்கடிதாயிரா 3நின்றது. எ - று. நோய்தபு சாயலென்க. 4ஆங்கு, அசை. 24 அன்னர் காதல ராக வவர்நமக் | கின்னுயிர் போத்தரு மருத்துவ ராயின் | யாங்கா வதுகொ றோழி யெனையதூஉந் | தாங்குதல் வலித்தன் றாயி | னீங்கரி துற்றன்றவ ருறீஇய நோயே |
எ - து: தோழீ! நெஞ்சு அத்தன்மையவர் நம்மிடத்துக் காதலையுடையவராகக் கருதி முன்பு நம்மை நீங்குதலருமையுற்ற அவ்வியற்கைப் புணர்ச்சியினன்று அவர் நம்மையுறுத்தின நோயைத் தான் பொறுத்தலைத்துணிந்த துணிவை ஆராய்ந்துபார்க்கில் அத்துணிவு எப்படியும் நம் இனிய உயிரைப் போக்கும்; அவர் நமக்கு (1) உயிரைப் போகாமல்மீட்கும் மருத்துவராய் இருப்பாராயின், அந்நிலை 5எக்காலத்து அவர்க்கு உண்டாவது கொல்லென 6வன்புறை எதிரழிந்து கூறினாள். எ - று. (2) வலித்தன்று என்பது வலித்ததன்றென்னும் மறைப்பொருள் தாராமை உணர்க. இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது. இஃது ‘‘இடைநிலைப்பாட்டு’’ (3) என்றதனாற் 7தாழம்பட்ட ஓசையின்றி ஐந்தடியான் இடைநிலைப்பாட்டுவந்த ஒத்தாழிசைக்கலி. (20)
1. இந்நூற்பக்கம் 49 : 2-ஆம் குறிப்புப் பார்க்க. 2. வலித்தன்று=வலித்தது - துணிந்தது; இஃது இங்கே வினையாலணையும் பெயராய் நின்றது, ‘‘காண்டல் வலித்தன்று’’ என்பது பு. வெ. கைக்கிளை. பெண்பாற், கொளு. 6. இவ்வகை ஆட்சியே அந்நூற்கொளுவில் மலிந்து கிடக்கின்றது. இதனை வினைத்திரிசொல்லென்று முற்காலத்தவரும், அகரச்சாரியை பெறாது அன்சாரியை பெற்று வந்த சொல்லென்று பகுபத முடிபு கூறும் இக்காலத்தவரும் வழங்குவர். 3. தொல். செய். சூ. 134. இச்சூத்திரத்தின் உரையில் ‘‘நகைமுதலாக.....தகைமையி னலியுநோய்’’ என்னும் பகுதியைப் பேராசிரியரும், (தொல். செய். சூ. 137) இச்செய்யுள் முழுவதையும் நச்சினார்க்கினியரும் இடைநிலைப்பாட்டு ஐந்தடியான் வந்ததற்கு மேற்கோள் காட்டியிருக்கிறார். (பிரதிபேதம்)1செய்தமென்மையால், 2மென்மையாய், 3நின்றது நோய்தபுசாயல்- காமநோய் கெடுத்தற்குக் காரணமான சாயலென்க ஆங்கு, 4ஆங்க அசை, 5எக்காலத்தே, 6வன்பொறை, 7தாழப்பட்ட.
|