பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்853

13 நகைமுத லாக நட்பினு ளெழுந்த

தகைமையி 1னலித லல்ல தவர்நம்மை

2வகைமையி னெழுந்த தொன்முரண் 3முதலாகப்

பகைமையி னலிதலோ விலர்ம னாயிழை 

பகைமையிற் கடிதவர் 4தகைமையி னலியுநோய்

எ - து: நகுநயமறைத்தலென்னும் மெய்ப்பாடுகாரணமாக நாங்கொண்ட நட்பிலே 5தோன்றிய தமது தகுதிப்பாடுகளாலே வருத்துதலொழிய அவர் நம்மைப் பொருள்களின் கூறுபாட்டாலே தோன்றிய பழைதாகிய மாறுபாடு காரணமாக வந்த பகையாலே வருத்துதலோ உடையரல்லர்; ஆயினும் ஆயிழாய்! அவர் 6தமது தகுதிப்பாடுகளாலே வருத்துதலொழிய அவர் நம்மை வருத்துநோய் பகைமையினுங் கடிதாயிராநின்றது. எ - று.

(2) முதல்-காரணம். பொருள்கள், ஈண்டு மனப்பொருள் முதலியன.

18 7நீயலே னென்றென்னை 8யன்பினாற் பிணித்துத்தஞ்

சாயலிற் சுடுத லல்ல தவர்நம்மைப்

9பாயிரு ளறநீக்கு நோய்தபு நெடுஞ்சுடர்த்

தீயினாற் 10சுடுதலோ விலர்ம னாயிழை

தீயினுங் கடிதவர் சாயலிற் கனலுநோய்

எ - து: நின்னிற் பிரியேனென்றுசொல்லி, என்னைத் தனக்குண்டாகிய அன்பினாலே வயக்கப்படுத்தித் தமது மென்மையாலே சுடுதலொழிய அவர் நம்மைப்பரந்த (3) இருளை அவ்விடத்தினின்றும்போம்படி நீக்கும் நெடியதாகிய கொழுந்தினையுடைய நெருப்பாற் சுடுதற்றொழிலோ உடையரல்லர்; ஆயினம் 


1. தொல். மெய்ப். சூ. 13.

2. ‘‘இருமுதலின்’’ (தொல். பாயிரம்) என்பதற்கு ‘இரண்டு காரணத்தான்’ என்று இளம்பூரணரும், ‘பெரிய காரணத்தான்’ என்று சிவஞான முனிவரும் ‘‘நோய்முதல்’’ (குறள். 948) என்பதற்கு, ‘நோய் வருதற் காரணம்’ என்று பரிமேலழகரும் எழுதியிருக்கும் உரை இங்கே அறிதற்பாலன.

3. ‘‘பகையிருட் பிழம்பு சீக்கும் பல்சுட ருமிழும் வாளான்’’ நைடதம். சுயம். 164.

(பிரதிபேதம்)1நலியதல்லது, 2வகைமையுள, 3முதலாப், 4தகையினவியு, 5தோன்றித்தமது, 6நமது தகுதிப்பாடுகளாலே நம்மை வருத்துநோய், 7நீயலே மென்றெம்மை, நீயலனென்றென்னை, 8அன்பினிற் பிணித்ததஞ், 9பாயிருனீக்கு, 10சுடுவதோ.