10 மல்லலூர் மறுகின்க ணிவட்பாடு (1) மிஃதொத்த | னெல்லீருங் கேட்டீமி 1னென்று |
எ - து: மின் விளங்குகின்ற நுடக்கமும் கனவினது தோற்றமும்போலே தன்வடிவைக் காட்டி என்னுடனே முற்படக் கூடிப் பின்னர்ப் பிறர் என்னை (2) இகழ்ந்து சிரிப்பனவற்றையும் எனக்குக் காட்டி எனக்குரிய நெஞ்சம் என்னோடு கூடி நில்லாமல் அழகினையுடைய மருப்பினையும் அழகினையுமுடைய (3) வேழம் சொரிதலைச்செய்யுமதத்தாலே பாகனுக்குச் செய்யுந்தொழில்களைத் தவிர்ந்து தான்வேண்டியவாறொழுகாதபடி தன்னை விலக்குந் தோட்டியையுங் கைகடந்தாற்போலத் தன்மேற் சென்ற வேட்கையினாலே என்னேவலைச் செய்தலைத் தவிர்ந்து தான் வேண்டியவாறொழுகாதபடி (4) தனக்குக் காவலாகிய அறிவும்நம் (5) அறிவாலே ஆராய்ந்த அடக்கமும் இயல்பாகத்தோன்றிய (6)நாணுடனே வறுவிதாக அவற்றைக் கைகடக்கும்படி 2மிகவும் என்னெஞ்சைக் கைக்கொண்டு தன்னலத்தை யான் காணாமல் மறைத்தவளைக் கூடும்வழி எவ்வழிதானென்று ஆராய்ந்து இனி(7)மடலேறுதலே கூடும்வழியென்று கருதி
1. இந்நூற்பக்கம் 386 : 3-ஆங் குறிப்புப் பார்க்க. 2. ‘‘பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி’’ கலி. 61. 22. 3. ‘‘பிறையெனு நுதலவள் பெண்மை யென்படு, நறைகம ழலங்கலானயன கோசர, மறைதலு மனமெனு மத்த யானையி, னிறையெனு மங்குச நிமிர்ந்து போயதே’’ கம்ப. மிதிலைக்காட்சி. 40. 4. ‘‘சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ, நன்றின்பா லுய்ப்ப தறிவு’’ குறள். 422. 5. (அ) “கற்றறிந்தார் கண்ட தடக்கம்’’ பழ. 243. (ஆ) ‘‘கற்றறிவு குலமேன்மை கருணைபெரும் புகழ்செல்வங் கைம்மா றெண்ணா, துற்றுதவுங் கொடைசீர்மை யொழுக்கமருந் தவநியம முறவின் கேண்மை, மற்றெதிரி லாத்திண்மை வாய்மைமிகுந் தூய்மைகுணம் வனப்பி யாவும், பெற்றிடினு மடக்கமில்லாப் பெருமிதத்தா லத்தனைக்கும் பிழையுண் டாமால்’’ பிரபோத. விவேகன்சேனை. 33. 6. “நோனா வுடம்பு முயிரு மடலேறு, நாணினை நீக்கி நிறுத்து’’ குறள். 1132. 7. ‘‘மடலேறலாவது:- தலைவன் ஒவ்வாக் காமத்தால் பனங்கருக்காற் குதிரையும் பனந்தருவி லுள்ளனவற்றால் வண்டில் முதலானவுஞ் செய்து அக்குதிரையின்மேலேறுவது; மடலேறுவான் திகம்பரனாய் உடலெங்கும் நீறுபூசிக் (1) கிழி ஓவியர்கைப்படாது தானே தீட்டிக் கிழியின் தலைப்புறத்தில் அவன் பெயரை வரைந்து கைப்பிடித்து ஊர்நடுவே நாற்சந்தியில் ஆகார (பிரதிபேதம்)1இன்று, 2மிகவுமன்னெஞ்சை.
|