பக்கம் எண் :

858கலித்தொகை

(1) மடன்மாவிலே சூட்டவேண்டி நூலாலேநீலமணிபோலும் நிறத்தையுடைய (2) பீலியையும் மற்றை அழகையுடைய பூளைப்பூவையும் ஆவிரம்பூவையும் எருக்கம்பூவோடே தொடுத்து அம்மடன்மாவிலே கட்டி வளப்பத்தையுடைய ஊரின் மறுகின்கண்ணே இவனொருத்தன் (3) இவளைப் பாடும்; பாட்டை எல்லீருங் கேட்பீராக என்று சொல்லிப் பாடத் 1தொடங்கி. எ - று.


நித்திரையின்றி அக்கிழிமேற் பார்வையுஞ் சிந்தையு மிருத்தி வேட்கைவயத்தனாய் வேறுணர்வின்றி (2) ஆவூரினும் அழன்மேற்படினும் அறிதலின்றி மழை வெயில் காற்றால் மயங்காதிருப்புழி, அவ்வூரிலுள்ளார் பலருங் கூடிவந்து (3) ‘நீ மடலேறுதியோ, அவளைத்தருதும் சோதனை தருதியோ’ என்றவழி, இயைந்தானாயின் அரசனுக்கு அறிவித்து, அவனேவலால் அவன் இனைந்து நையத்தந்து ‘மடலேறு’ என்றவழி, ஏறு முறைமை:- பூளை எலும்பு எருக்கு இவைகளாற் கட்டிய மாலையணிந்துகொண்டு அம்மாவில் ஏற அவ்வடத்தை வீதியில் ஈர்த்தலும் அவ்வுருளை உருண்டோடும் பொழுது, பனங்கருக்கு அறுத்தவிடமெல்லாம் இரத்தந் தோன்றாது வீரியந்தோன்றின் அப்போது அவளை அலங்கரித்துக் கொடுப்பது. இரத்தங்கண்டுழி அவனைக் கொலைசெய்து விடுவது. இவை புலவரால் நாட்டிய வழக்கென்றுணர்க’’ என்பது தஞ்சை. 101. உரையில் உள்ளது. இது குலோத்துங்க 128. குறிப்பில் (1) தான் காமித்த தலைவியினுருவை ஒரு படத்தில் தன் கையாலெழுதி யென்றும் (2) ஆவுரிஞ்சினுமென்றும் (3) நீ மடலேறிச் சோதனைத்தந்தால் நீ இச்சித்த பெண்ணைக் கொடுக்கச் செய்வோமென்று கூற அதற்கு அவனிசைந்தானாயி னென்றும் விளக்கத்தோடும் சிறிது சொல் வேறுபாட்டோடும் உளது. ஆவிரம்பூவும் அணிவதுண்டு.

1. சிலப். 70 - 71-ஆம் அடிகளும் அவற்றினுரையும் பார்க்க.

2. ‘‘பூவல்ல பூளை யுழிஞையொ டியாத்த, புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி, பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி’’ கலி. 140 : 4 - 6. 

3. (அ) ‘‘கழிகின்ற வென்னையு நின்றநின் கார்மயி றன்னையும்யான், கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டு’’, (கோவையார். 76.) என்பதன் விசேடவுரையில், ‘தனக்கு அவளயலென்னுங்கருத்தினனாய், நின் கார்மயிலென்றான். என்னையும் நின் கார்மயிறன்னையும் மடலிடத் தெழுதுவேனென்றதென்னை? கார்மயிலை யெழுதுவதன்றித் தன்னையு மெழுதுமோவெனின், மடலெழுதிக் கையிற்கொண்டால் உரையாடுகையின்றி இவனும் ஓவியமாகலின், மடலின்றலையிலே தன்னூரையுந்தன்பேரையும் அவளூரையு மவள்பேரையும் எழுதுகயைால் என்னையு மென்றான்’ என்றுள்ள குறிப்பால் மடலூர்பவற்கு உரையாடாமை உண்டென்றறியப்படுமாயினும் (ஆ) ‘‘என்றியான் பாடக்கேட்டு’’ (இ) ‘‘பாடுவேன் பாய்மா நிறுத்து’’ (ஈ) ‘‘பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே, யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ’’

(பிரதிபேதம்)1தொடங்கியென்க நஃவனவற்றையும்.