நகுவனவற்றையுங்காட்டி என்றான், மடலேறுதல்(1) வரைபாய்தலாகிய இரண்டினையுந் தான் பின்புகருதுதலின் இவனொருத்தன் எனத் தன்னைப் 1பிறர்போற் கூறினான். அஃது உலகத்தார் பாடும் பாட்டன்மையுந் தோற்றுவித்துநின்றது. இவளென்று சுட்டிற்று, கையில் (2) எழுதிப்பிடித்த கிழியிலவளை. 12 (3) படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை | (4)நல்கியா ணல்கி யவை |
எ - து: விளங்குகின்ற இழையினையுடைய, என்னாலே காமிக்கப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும் வருத்தத்தாலுண்டான பனையீன்ற மடலாற் செய்த குதிரையும். எ - று.
(உ) ‘‘அணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி, யணிநிலம் பாடிவரற்கு’’ (ஊ) ‘‘வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாட’’ (கலி. 438 : 26, 139 : 13, 140 : 13 - 14, 141 : 5 - 6, 22.) என்ன இந்நூலுட் பலவிடத்தும் வருதலால், அவளைக் குறித்துப் பாடுதலாகிய உரையாடலுண்டென்பது தெளிவாம். இந்நூற்பக்கம் 856 : 5-ஆம் குறிப்பும் பார்க்க. 1. (அ) ‘‘விரையூர் குழலியர் தந்தசிந் தாகுல வெள்ளநிறைக், கரையூர் பொழுதிளங் காளையர் தாங்கிழி கைப்பிடித்துத், தரையூர் தொறும் பெண்ணை மரமட லூர்வர் தவிர்ந்துபின்னும், வரையூர்வர் தஞ்சையர் கோன் வாணன் மாறையில் வாணுதலே’’ தஞ்சை. 102. (ஆ) ‘‘முன்னோன் றிருக்கொடி யேற்றத்தி னான்முயங் காதொழிந்தாற் பின்னோன் மழைக்குடை வீழ்ந்தொழி வார்......வசதேவன் பெற்ற விருவரிலே’’ (இ) ‘‘பரசன் சொரூப மெடுப்பது வோமலை பாய்ந்துகடன், முரசன் சொரூப மெடுப்பதுவோ.......அன்பர் பேரெண்ணமே’’ மாறன். 126, 154. (ஈ) ‘‘மடவார் காம வெள்ளத்தின் மோதலுற்றார், கிழியொன்று கைப்பிடித் தேமட லேறுவர் கேண்மையற்றார், பழியொன்று மெண்ணில ராய்ப் பறம் பேறியும் பாய்வர்களே’’ திருவாவடுதுறைக். 119. 2. இந்நூற்பக்கம் 858 : 2-ஆம் குறிப்பில,் முதலிலுள்ள செய்யுளாலும் ‘‘திடம்பெற்ற காசினி யோர்யானு மங்கையுஞ் சித்திரஞ்சேர் படம் பெற்றிருக்கிலன் றோதிரு மாலெனப்பாவிப்பரே’’ (மயூரகிரி. 149.) என்பதனாலும் தலைவனுருவும் எழுதுவதுண்டென்று தெரிகிறது. 3. ‘‘தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு, மாலை யுழக்குந் துயர்’’ குறள். 1135. 4. (அ) “நல்கினு நல்கா னாயினும்’’ புறம். 80 : 5; (ஆ) ‘‘நல்கினை கேளாய்’’ மணி. 12 : 56. (இ) ‘‘நுமக்குநீர் நல்குதி ராயின்’’ (பிரதிபேதம்)1பிறன்போற்.
|