பக்கம் எண் :

860கலித்தொகை

14 (1) பொறையென் வரைத்தன்றிப் பூநுத லீத்த

(2) நிறையழி காமநோய் நீந்தி யறையுற்ற

(3) வுப்பியல் 1பாவை யுறையுற் றதுபோல

வுக்கு விடுமென் னுயிர்

எ - து: என்னுடைய உயிர்தான் 2பொறுத்தல் என் எல்லைத்தன்றாகப் பொலிவுபெற்ற நுதலினையுடையாள் தந்த, நிறைஎன்னுங் குணம் அழிதற்குக் காரணமான காமநோயை நீந்தி உப்புப் பாத்தியிலே கிடந்த உப்பால் இயன்ற பாவை மழைத்துளியை உற்ற தன்மைபோலக் கரைந்துவிடா நின்றது. எ - று.

18 பூளை (4) 3பொலமல ராவிரை (5)வேய்வென்ற

தோளா ளெ[ம](ன)க் 4கீத்த பூ

எ - து: வேயை வென்ற தோளையுடையாள் எனக்குத் தந்த பூக்கள் பூளைப்பூவும் பொன்போன்ற பூவையுடைய ஆவிரம்பூவும். எ - று.

எனவே, தான் 5கொடுத்தன நல்லபூ என்றான். 6பொலமல ரென்னும் முடிவு ‘‘தொடரியலான’’ (6)என்னும் இலேசான் முடித்தாம்.


1. ‘‘இந்நோய், பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின்’’ (கலி. 58 : 20 - 21) என்பதும் அதன் குறிப்பும் ‘‘பொறுக்கல்லா நோய்செய்தாய்’’ (கலி. 94 : 11) என்பதும் ஒப்புநோக்கற்பாலன.

2. (அ) ‘‘நிறையு முண்டோ காமங் காழ்கொளின்’’ மணி. 5 : 20. (ஆ) ‘‘நிறையென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்கு மாயின்’’ சூளாமணி. கல்யாண. 155.

3. (அ) ‘‘நெடுவெள் ளுப்பி னிரம்பாக் குப்பை, பெரும்பெயற் குருகி யாஅங்கு’’ (ஆ) ‘‘மிகுபெய, லுப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணுவரை நில்லாக் காம நண்ணி, நல்கினள்’’ அகம். 206 : 14 - 15. 208 : 18 - 21. 
(இ) ‘‘உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும்’’ திரி. 83. (ஈ) “கடும்புன னெருங்க வுடைந்துநிலை யாற்றா, வுப்புச் சிறைபோ லுண்ணெகிழ்ந் துருகி’’ பெருங். (3) 20 : 120 - 121.

4. ‘‘பொன்னே ராவிரைப் புதுமலர்’’ குறுந். 173. 

5. வென்றவென்பது மரபுபற்றி உவமச்சொல்லாய் வருதற்கு, ‘‘வேய்வென்ற தோள்’‘ என்பது மேற்கோள்; தொல். உவம. சூ. 17. இளம்.

6. தொல். புள்ளிமய. சூ. 61 இச்சூத்திரத்தின் இளம். நச். உரைகளிலும் ஒன்றின முடித்தலால் மென்கணம் வந்தவிடத்தும் பொன் என்பது

(பிரதிபேதம்)1பாறை, 2பொறுத்ததென் னெல்லை, 3பொனமல ராவிரம், 4அளித்தபூ, 5தொடுத்தன நல்ல, 6பொன்மலரென்னுமுடிபு தொடரியல் ‘ஆவிரை’ என்னு மிலைசான்முடித்தாம்.