பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்861

20 (1) உரிதென் வரைத்தன்றி யொள்ளிழை தந்த

1பரிசழி (2) பைதனோய் மூழ்கி (3) யெரிபரந்த

நெய்யுண் மெழுகி னிலையாது பைபயத்

(4) தேயு மளித்தென் னுயிர்

எ - து: ஒள்ளிய இழையினையுடையாள் என்னாற் பொறுக்குமெல்லைத் தன்றாக எனக்குரித்தாகத் தந்த, என்னியல்புகள் அழிதற்குக் காரணமான, வருத்தத்தையுடைய காமநோயிலே என்னுயிர் அழுந்தி, நெருப்புப் பரந்த நெய்யுள்ளே கிடந்த மெழுகு மெத்தென உருகித் தேயுமாறுபோல 2நிலையில்லாதே மெத்தென மெத்தெனத் தேயாநின்றது; இஃது எல்லாரானும் அளிக்குந்தன்மை உடைத்து. எ - று.

24 இளையாரு மேதி லவரு 3முளையயா

னுற்ற துசாவுந் துணை

எ - து: யானுற்ற காமநோய்க்கு யான் உளையும்படி உசாவுந் துணை இளையபிள்ளைகளும் இக் காமநோய்க்கு அயலானாருமே; பிறரில்லை. எ - று.

26 என்றியான் பாடக் கேட்டு

அன்புறு கிளவியா ளருளிவந் தளித்தலிற்

றுன்பத்திற் றுணையாய 4மடலினி யிவட்பெற

வின்பத்து ளிடம்படலென் றிரங்கின ளன்புற்


பொலமெனத் திரிந்து வருதலுண்டென்பதற்கு, ‘‘பொலமலராவிரை’’ என்பது மேற்கோள்.

1. உரிது. அகம். 10 : 7; சூளா. மந்திர. 36, அரசியல் 357; கலி. 76 : 17; அதன் குறிப்பும் பார்க்க

2. ‘‘பைதனோய்’’ கலி. 32 : 14, 130 : 18.

3. (அ) ‘‘அருநா ணளிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே’’கோவையார். 44. ஆ) ‘‘காதல ராயினுங் காதல் கையிகந் தேதில ராயின மடிகட் கின்றென வூதுலை மெழுகினின் றுருகினார்’’ சூளா. முத்திச். 34. (இ) ‘‘உண்ணிறை யழிய வுலையிடு மெழுகொத் தொருமொழி தோழியர்க் குரைத்தாள்’’ பிரமோத். பிரதோட. 37. (ஈ) ‘‘அழல்படு மெழுகே யென்னக் கொம்மென வுருக வுள்ளங் குதூகலித்து’’ (உ) ‘‘தீசேர் மெழுகென வுள்ளம் விள்ள’’ கந்த. திருநகர். 122. மேரு. 4. (ஊ) ‘‘உலையின் மீது மெழுகொத் துருகினாள்’’ அரிச். மயான. 44. (எ) ‘‘மெழுகா ரழலுற் றெனவிளகி’’ (ஏ) ‘‘மெழு கொள்ளெரிக்கதுவியாங்குளநெகிழ்ந் துருகினாள்’’ விநாயக. முக்கலர். 5; கிருச்சமதரு. 2.

4. ‘‘துடியிடையீ, ரருளா தொழியி னொழியா தழியுமென் னாருயிரே’’ கோவையார். 73.

(பிரதிபேதம்)1பரிவழி, 2நிலைநில்லாதே, 3உலையயானுற்றதுகாறுந், 4மடலினிலட்பெற.