றேமொழி மாத ருறாஅ துறீஇய (1) காமக் கடலகப் பட்டு எ - து: தேன்போலும் மொழியினையுடைய மாதர் 1தான் காமுறாதே என்னைக்காமுறுத்தின காமமாகிய கடலிலே அகப்பட்டு (2) உசாத்துணை இல்லாத நடுவியாமத்தும் உசாத்துணையுள்ள பகலிடத்தும் 2மனவருத்த மாகிய திரைகள் வந்து அலைக்கையினாலே மாவின்மேல் இருக்கின்றேனிருக்கின்றேனென்று மனத்தாற்கருதியிருந்து அம் (3) மடன்மாஒருதெப்பமாக அக்கடலை நீந்துவேன்; அஃது என்னிலை; என்றான். எ - று. 18 (4) உய்யா வருநோய்க் 3குயலாகு மைய | லுறீஇயா ளீத்தவிம் மா |
எ - து: என்னை மயக்கமுறுத்தினவள் அதற்கு மருந்தாகத் தந்த இம்மடன்மா யான் பிழையாமைக்குக் காரணமான அரிய காமநோய்க்குப் பிழைக்கும்படிக்குச் செய்வதொன்றாய் இராநின்றதென்றான். எ - று. 20 (5) காணுந ரெள்ளக் 4கலங்கித் தலைவந்தெ | னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு |
1. (அ) ‘‘காமக் கடல்’’ (ஆ) ‘‘காமக் கடும்புனல்’’ குறள். 1164, 1167. 2. (அ) ‘‘மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா, வென்னல்ல தில்லை துணை’’ குறள். 1168. என்பதும் (ஆ) ‘‘மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற’’ குறள். 1136. என்பதற்கு, ‘எல்லாருந் துயிலும் இடையாமத்தும் யானிருந்து மடலூர்தலையே கருதா நிற்பேன்’ என்று பரிமேலழகர் எழுதியிருக்கும் உரையும் ஈண்டு அறிதற்பாலன. 3. (அ) ‘‘துறைசையன்னார், கணையார் விழிதந்த காமக் கடலைக் கடக்க நெஞ்சே, புணையாகக் கோடன் மடலன்றி வேறு பொருளில்லையே’’ திருவாவடுதுறைக். 118. (ஆ) ‘‘அடலான வேல்விழி யார்கை கொடாவிடி லாசைநெடுங், கடலானசோகச் சுழியூடகப்பட்ட காமுகர்தா, மடலான தோணிகொண் டேநீந்திச் சேர்வர் மணக்கரைக்கே’’ மாறன். 125. 4. (அ) ‘‘என்னு ளிடும்பை தணிக்கு மருந்தாக, நன்னுத லீத்த விம்மா’’ கலி. 140 : 15 - 16. (ஆ) ‘‘உயலாற்றா, வுய்வினோய்’’ குறள். 1174. 5. (அ) ‘‘பிற ரெள்ளத் தோன்றி, யொருநாண் மருங்கிற், பெருநாணீக்கித், தெருவி னியலவுந் தருவது கொல்லோ’’ குறுந். 182. (ஆ) ‘‘பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி’’ கலி. 61 : 22. (பிரதிபேதம்)1தாங் காமுறாதே, 2மனம் வருத்த, 3உயவாகும், 4கலங்கத்.
|