மாணிழை மாதரா ளேஎரெனக் காமன 1தாணையால் வந்த படை எ - து: மாட்சிமைப்பட்ட இழையினையுடைய மாதராள் ஏரால் வந்த வருத்தமென்று யான் கூறும்படியாகக் (1) காமனுடைய ஏவலாலே வந்த காமநோயாகிய படை என்னைக் கண்டார் இகழும்படி யான்கலங்க என்னிடத்தே வந்து என்னுடைய (2) ஆண்டன்மையின் அழகாகிய மதிலைச் சூழவிட்டிருந்து புறத்தையெல்லாமுடைத்துப் பின்னர் உள்வாயை அழியா 2நிற்குமென்றான். எ - று. கலங்கி, கலங்க என்க. 24 (3) காமக் கடும்பகையிற் 3றோன்றினேற் கேம | மெழினுத லீத்தவிம் மா |
எ - து: காமமாகிய கடியபகை ஆண்மையை உள்ளும்புறம்பும் அழித்தலாலே இங்ஙனம் வடிவுகொண்டு தோன்றினஎனக்கு அழகையுடைத்தாகிய நுதலினையுடையாள் தந்த இம்மடன்மா, பரிகாரமாயிற்றென்றான். எ - று. 26 அகையெரி யானாதென் னா (4) ருயி ரெஞ்சும் | 4வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ | முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் | தகையாற் றலைக்கொண்ட 5நெஞ்சு |
எ - து: முல்லைமுகையை ஒக்கும் இலங்குகின்ற எயிற்றையும் இனியதாகிய மகிழ்ச்சியையுமுடைய மாதருடைய அழகாலே
1. (அ) ‘‘பீழைமை பலவுஞ் செய்து பிணிப்படை பரப்பி வந்து, வாழுயிர்ப்பொழித்து வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணுங், கூழைமை பயின்ற கூற்ற வரசனை’’ (சூளா. துறவு. 18) என்பதும் (ஆ) ‘‘காலனைச் சூழ்ந்த நோய்போ னபுலமா விபுலர் சூழ’’ (சீவக. 1144) என்பதற்கு, ‘காலன் ஏவினவிடத்தே சேறற்கு அவனைச் சூழ்ந்த நோய்போல மாவின்மேலே நபுல விபுலர் சூழ்ந்துவர’ என்றெழுதியிருக்கும் உரையும் இதன் நிழலாக இருக்கின்றன. 2. (அ) ‘‘நாணொடுநல்லாண்மைபண்டுடையே னின்றுடையேன், காமுற்றாரேறு மடல்’’ (ஆ) ‘‘காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு, நல்லாண்மை யென்னும் புணை’’ குறள். 1133. 1134. 3. ‘‘காம முழந்து வருந்தினார்க் கேம, மடலல்ல தில்லை வலி’’ குறள். 1131. 4. ‘‘உயிரெஞ்சு துயர்செய்தல்’’ கலி. 60 : 6. (பிரதிபேதம்)1ஆணையான், 2நிற்குமேயென்றான், 3தோன்றினோர்க்கு, 4வகையினான், 5நோய்.
|