அவளிடத்தைப்பற்றிக் கொண்ட என்னுடைய நெஞ்சிடத்து உள்ளத்தைச் சுடப்பட்டு எரிகின்ற காமத்தீ என் அரிய உயிர்போங் கூற்றாலே அமையாதே நின்று (1)சுடுதலைச் செய்யும்; ஐயோ! யான் எங்ஙனம் ஆற்றுவேனென்றான், எ - று. (2) உறுப்புடையதுபோலே நெஞ்சுக்கு உள்ளமுண்டென்றான். 30 அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற | நேரிழை யீத்தவிம் மா |
எ - து: காமமாகிய பொறுத்தற்கரியநோய் அறுதியாக நெருப்பு; ஒத்த இழையினையுடையாள் அதற்குப் பரிகாரமாகத்தந்த இம்மடன்மா அறுதியாக அதற்கொரு நிழலாய் இருந்ததென்றான். எ - று. | ஆங்கதை | 33 | அறிந்தனி ராயிற் சான்றவிர் (3) 1தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ |
1. ‘‘ஊர்தலைக்கொண்டு......காமத்தீ, நீருட் புகினுஞ் சுடும்’’ (கலி. 144 : 59 - 62) என்பதும் அதன் குறிப்புள் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் ஒப்புநோக்கற்பாலன. 2. தொல். பொருளி. சூ. 2. 3. இந்திரன், விண்ணுலகில் தன்பால் வந்த யயாதியரசனை நோக்கிப் பலவும்வினாவுங்கால், ‘தவத்தில் நீ யாருக்கு ஒப்பாயினை’ என்றதற்கு அவன், ‘தவத்தில் எனக்கு ஒப்பானொருவனையும் நான் காணவில்லை’ என, இந்திரன், ‘பிறரை அவர் பெருமையை அறியாமலே அவமதித்த இத்தவற்றால் நீ மேலுலக வாழ்வொழியக் கீழே விழுவாய்’ என, ‘அவ்வாறாயின் நல்லோரிடையே விழவேண்டுகிறேன்’ என்று அவ்விந்திரன்பால் அவ்வரம்பெற்று விழுமரசன் சிலர் வேள்விசெய்யுமிடத்துக்கு நேரே இறங்குகையில் அங்கிருந்த அஷ்டகன் மிகப் பலசெய்திவினாவ, அவற்றுக்குவிடைகள் கூறிக்கீழேவீழ விரைந்தபோது, அவனும் பிரதர்த்தனனும் வஸுமனஸும் சிபியும் தமக்கு மேலுலக முண்டென்று கேட்டறிந்து அவ்வுலகங்களை யயாதிக்குக் கொடுப்ப, அவன் கொள்ளேனெனமறுத்துப் பின்பு அங்குவந்த தவமகளை அவள் கூற்றால் தன்மகள் மாதவியென்றும் அவர்களை அவள்பெற்ற பிள்ளைகளென்றும் தெளிந்து அவள் கூறிய நியாயத்தால் அவளும் அந்நால்வர்களும் அளித்த தவப்பயனைமாற்றவொண்ணாதுஏற்று, மேலுலகினின்று அங்குவந்த ஐந்து பொற்றேர்களில் தனித்தனியே அந்நால்வர்களுடன் ஏறி மேலுலகடைந்தனனென்று ஸ்ரீமஹாபாரதம். ஆதிபர்வம். 80 - 87-ஆம் அத்தியாயத்துள்ள செய்தி இம்மூலத்துக்கு ஒருவாறு பொருந்துமென்று தோற்றுகிறது. (பிரதிபேதம்)1தான்றவ மொழீஇ.
|