பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்869

(1) ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென்
றுயர்நிலை 1தீர்த்த னுந்தலைக் கடனே

எ - து: என்று கூறி என்னிடத்துச் செல்கின்ற வருத்தத்தை நீர் அறிந்தீராயிற் சான்றீராயுள்ளீர்! அமைந்த சான்றோர் இவன் தவஞ்செய்தற்கு உரியனென்று தவத்துள்ளே 2கூட்டிக்கொள்ளப்பட்ட அரசனை, அவன் தான் தவஞ்செய்தலினீங்கித் துறக்கத்திற் சேறலை வழுவுகையினாலே, அவ்வழுவுதலை அவர் மீட்டுத், தவஞ் செய்வித்து, உயர்ந்த நிலைமையையுடைய சுவர்க்கத்தேபோகவிட்டுத் துயர் 3தீர்த்தாற்போல, (2)என் துயரினதுதன்மையைப் போக்குதலும் நும்மிடத்து முறைமை; எனச் சான்றோரை நோக்கிக் கூறினான். எ - று.

இது தன்கட் டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது.

இது (3) தரவும் போக்கும் 4பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு. (22)

(140).கண்டவி ரெல்லாங் கதுமென வந்தாங்கே
பண்டறியா தீர்போல நோக்குவீர் கொண்டது
மாவென் றுணர்மின் மடலன்று மற்றிவை
பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த
புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி
பிடியமை நூலொடு பெயம்மணி கட்டி
யடர்பொன் னவிரேய்க்கு மாவிரங் கண்ணி
நெடியோன் மகனயந்து தந்தாங் கனைய
வடிய வடிந்த வனப்பினென் னெஞ்ச
10  மிடிய விடைக்கொள்ளுஞ் சாய லொருத்திக்
கடியுறை காட்டிய செல்வேன் மடியன்மி
னன்னே னொருவனேன் யான்;

1. (அ) ‘‘உயர்நிலை யுலகம்’’ மது. 197. (ஆ) ‘‘உயர்நிலை யுலகத்து’’ புறம். 50 : 15.

2. ‘‘சான்றோ ரிருந்த வவையத் துற்றோ, னாசாகென்னும் பூசல்போல வல்லே களைமதி யத்தை’’ புறம். 266 : 8 - 10.

3. தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு ஆசிரியச் சுரிதகத்தான் வந்ததற்கு இச்செய்யுள் மேற்கோள். தொல். செய். சூ. 154. பேர்; நச்.

(பிரதிபேதம்)1தீர்த்தலுந்தலை, 2கூடிக்கொள், 3தீர்ந்தாப்போல, 4பாட்டுமிடைமிடைந்த.