13 | என்னானும், பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ வென்னு ளிடும்பை தணிக்கு மருந்தாக நன்னுத லீத்தவிம் மா; | 17 | திங்க ளரவுறிற் றீர்க்கலா ராயினுந் தங்காதல் காட்டுவர் சான்றவ ரின்சாய லொண்டொடி நோய்நோக்கிற் பட்டவென் னெஞ்சநோய் கண்டுங்கண் ணோடாதிவ் வூர்; | 21 | தாங்காச் சினத்தொடு காட்டி யுயிர்செகுக்கும் பாம்பு மவைப்படி லுய்யுமாம் பூங்கண் வணர்ந்தொலி யைம்பாலாள் செய்தவிக் காம முணர்ந்து முணராதிவ் வூர்; | 25 | வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றா ரஞ்சலென் றாலு முயிர்ப்புண்டா மஞ்சீர்ச் செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காம மறிந்து மறியாதிவ் வூர்; ஆங்க; | 30 | என்க ணிடும்பை யறீஇயினெ னுங்கட் டெருளுற நோக்கித் தெரியுங்கா லின்ன மருளுறு நோயொடு மம்ம ரகல விருளுறு கூந்தலா ளென்னை யருளுறச் செயினுமக் கறனுமா ரதுவே |
(1) இது மடலேறுவேனென்ற தலைவன் கண்டார்க்குக் கூறியது. இதன் பொருள். (2) 1கண்டவி ரெல்லாங் 2கதுமென் வந்தாங்கே | பண்டறியா தீர்போல 3நோக்குவீர் கொண்டது |
1. இச்செய்யுளையும் ஏறிய மடற்றிறமான பெருந்திணையென்று (தொல். அகத். சூ. 13. உரையில்) இவர் கூறியிருக்கிறார். 2. ‘‘கண்டவிரெல்லாம்.....நோக்குவீர்’’ என்பது எல்லாமென்னுஞ் சொல் சிறுபான்மை முன்னிலைப் பன்மைக்கண் வருமென்பதற்கு மேற்கோள்; தொல். பெயரி. சூ. 33. இ - வி. சூ. 191. (பிரதிபேதம்)1கண்டனிர், 2கதுமெனவாங்கே, 3நோக்குதிர்.
|