பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்871

(1) மாவென் றுணர்மின் மடலன்று மற்றிவை
பூவல்ல (2) பூளை யுழிஞையோ டியாத்த
புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி
பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி
யடர்பொன் னவிரேய்க்கு மாவிரங் கண்ணி
(3) நெடியோன் மக 1னயந்து தந்தாங் கனைய
வடிய வடிந்த வனப்பினென் னெஞ்ச
10  மிடிய 2விடைக்கொள்ளுஞ் சாய லொருத்திக்
(4) கடியுறை காட்டிய செல்வேன் மடியன்மி
னன்னே னொருவனேன் யான்

எ - து: என்னைக்கண்ட நீங்களெல்லாம் (5) கடுகவந்து அவ்வூரிடத்து என்னைப் பண்டு அறியாதீர்போலப் பாராநின்றீர்; நாப்பெய்தமணியைக்கழுத்திலே கட்டிக் கையாற் பிடித்தலமைந்த வாய்க்கயிற்றோடே யான் கையிற் கொண்டது மடன்மாவன்று, ஏறுவார் ஏறப்படுங் குதிரையென்றும் பின்னைத் தலையினும் மார்பினுங் கிடக்கின்ற இவை தகடாகிய பொன்னினது விளக்கத்தை ஒக்கும் ஆவிரம்பூவாற்செய்த கண்ணியும் (6) உழிஞைப் பூவோடே பூனைப்பூவும் புனத்தையுடைய


1. (அ) ‘‘மாவென மடலு மூர்ப’’ குறுந். 17. (ஆ) ‘‘மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்’’ வளையாபதி.

2. இந்நூற்பக்கம் 1857 : எ-ஆம் குறிப்புப் பார்க்க.

3. (அ) ‘‘மதனற்குமெழுத வொண்ணாச், சீதையைத் தருதலாலே’’ (ஆ) ‘‘இந்தத் தோன்றலை, யெழுதலாங்கொலிம் மன்மதனாலென்றாள்’’ கம்ப. மிதிலைக்காட்சி. 5. உலாவியல். 25. என்பவற்றால் காமன், ஓவியத்துறைகைபோயவனெனப்படுதலும் இங்கே நோக்கற்பாலது.

4. ‘‘அடியுறை’’ கலி. 54 : 4.அதன் குறிப்பும் பார்க்க.

5. (அ) “கதுமெனக் கண்டவர்க்கு” (ஆ) “கதுமென நோக்கன்மின்” கலி. 60 : 5, 147 : 17. (இ) “கதுமெனத் தானோக்கி” குறள். 1173. (ஈ) இந்நூற்பக்கம் 422 : 7-ஆம் குறிப்பும்பார்க்க.

6. (அ) ‘உழிஞை-கொற்றான்; அது குடநாட்டார் வழக்கு’ என்பது புறம். 50. விசேடவுரை. (ஆ) இது கொடியை யுடையதென்று ‘‘நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு’’ (புறம். 76 : 5, 77 : 3) என்பதனால் தெரிகிறது. (இ) இதன் பூ மதில்வளைப்பவருக் குரித்தென்று சிலரும் (ஈ) அவருக்கும் மதில் காப்பவருக்கு முரித்தென்று சிலரும் கூறுவர்; (உ) இது பூளையின்வகையு ளொன்றென்றும் கூறப்படும்.

(பிரதிபேதம்)1நயந் துகந்தாங்கு, 2இடைகொள்ளும்.