(1) 1விருளுறு கூந்தலா ளென்னை யருளுறச் செயினுமக் (2) கறனுமா ரதுவே எ - து: என்னிடத்து நிகழ்கின்றவருத்தத்தை யான் அறிவித்தேன்; இனி இதனை நும்மிடத்தே தெளிதலுறப் பார்த்து ஆராயுங்காலத்து இத்தன்மைத்தாகிய மயக்கமுறுங் காமநோயாலுண்டாகிய என்மயக்கம்நீங்கும்படி இருட்சியுறுகின்ற கூந்தலையுடையாள் என்னை அருளுதலுறும்படி பண்ணுவீராயின், அது நுமக்கு அறனும் புகழுமரமென்றான். எ - று. இது தன்கட் டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது. (3) இது பாடெனில் ஆடெனில் என எதுகையியைந்த அடி என்னானும் என வேறு2நின்ற சீரோடுங் கூடி ஐஞ்சீரடுக்கிவந்த கலிவெண்பாட்டு. (23) (141). | அரிதினிற் றோன்றிய யாக்கை புரிபுதாம் வேட்டவை செய்தாங்குக் காட்டிமற் றாங்கே யறம்பொரு ளின்பமென் றம்மூன்றி னொன்றான் றிறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன் றணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி யணிநலம் பாடி வரற்கு; | 7 | ஒரொருகா லுள்வழிய ளாகி நிறைமதி நீரு ணிழற்போற் கொளற்கரியள் போரு |
1. ‘‘இருளுற ழிருங்கூந்த லிவண்மாட்டு’’ கலி. 49 : 18. என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 2. ‘‘அறனுமாரதுவே’’ ஐங். 44. 3. தொல். செய். சூ. 154. உரையில் இவர் இச்செய்யுளை மேற்கோள்காட்டி, ‘‘இது, ‘பாடெனில்’ என்றும், ‘ஆடெனில்’ என்றும் எதுகையியைந்த அளவடி, ‘என்னானும்’ என வேறுநின்ற சீரோடுங்கூடி ஐஞ்சீரடுக்கிற்று. இதனுள், ‘ஆங்க’ எனத் தனிச்சொல் வந்தது’’ என்று எழுதியிருப்பதும், பேராசிரியர் அதனுரையில் இதனைமேற்கோள்காட்டி, ‘‘இச்செய்யுள் தரவும்போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட்டு ஆசிரியச் சுரிதகத்தாலிற்றதாகலின், இதனுள், ‘என்னானும்பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே’ என்னும் அடி ஐஞ்சீரடுக்கினுள் வந்தது; என்னை? ‘பாடெனிற். பாடுகோ’ என்னும் அளவடியிரண்டும் எதுகையா யமைந்தவழி, ‘என்னானும்’ என வேறுநின்ற சீரொடுங் கூடி ஐஞ்சீரடுக்கினமையின். இதனுள், ‘ஆங்க’ எனத் தனிச்சொல்வந்தது’’ என்று எழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலன. (பிரதிபேதம்)1இருளுறழ்கூந்தலாள், 2நின்று.
|