பக்கம் எண் :

876கலித்தொகை

ளடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேன்
மன்றம் படர்வித் தவள்; வாழி சான்றீர்;
11 பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை
மையறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு
மின்னா விடும்பைசெய் தாள்; அம்ம சான்றீர்;
15 கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ
பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு;
17 இடியுமிழ் வானத் திரவிருள் போழுங்
கொடிமின்னுக் கொள்வேனென் றன்னள் வடிநாவின்
வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க்
கல்லாமை காட்டி யவள்; வாழி சான்றீர்;
21 என்றாங்கே;
வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாடத்
திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே
பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை
போலக் கொடுத்தார் தமர்.

1இஃது இரந்துபின்னின்ற தலைவன் (1) மடலேறியவழி அவள் தமர் அஞ்சித் தலைவியைக் கொண்டுவந்து கொடுத்தலைக் கண்டோர் கூறியது.

இதன் பொருள்

அரிதினிற் றோன்றிய யாக்கை (2) புரிபுதாம்
வேட்டவை செய் 2தாங்குக் காட்டிமற் றாங்கே
யறம்பொரு ளின்பமென் றம்மூன்றி 3னொன்றன் 
றிறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன்


1. ஏறிய மடற்றிறமான பெருந்திணைக்கே (தொல். அகத். சூ. 13. நச். உரையிலும்) இச்செய்யுள் மேற்கோள்.

2. புரிதலென்னுஞ்சொல், மணம் வேறுபடுதலென்னும் பொருளிலும் வருமென்பது (அ) ‘‘புரிந்து’’ கலி. 33 : 27. என்பதனுரையாலும் துணியப்படும். (ஆ) ‘‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை’’

(பிரதிபேதம்)1இது இரந்து, 2ஆங்கேகாட்டிமற்றாங்கவறம், 3ஒன்றின்றிறம்.