1றணிநிலைப் (1) பெண்ணை மடலூர்ந் தொருத்தி யணிநலம் (2) பாடி வரற்கு எ - து: (3) பெறுதற்கரிதாகத் தோன்றிய மக்கள் 2யாக்கை முற்பிறப்பில் தாம் மனம் வேறுபட்டு விரும்பின தீவினைகளைச்செய்து அறம்பொருளின்பம் என்று சொல்லப்பட்ட அம்மூன்றில் அறமாகிய ஒன்றன் கூற்றைச் சாராதவர்கள் இப்பிறப்பிற் செய்து திரியுந்தொழில்களில் ஒன்றாகிய அழகினையுடைத்தாகிய நிலைமையினையுடைய பனைமடலையேறி அவ்வூரிடத்தே எல்லார்க்குங்காட்டி ஒருத்தியுடைய அழகினையுடைய நலத்தைப் பாடி 3வருவதற்கு நூல்[கள்] சாற்றிற்று; ஆதலால், யானும் அதுவேதுணிந்து மடலேறிப்பாடுவேனென்றான். எ - று. யாக்கை மடலூர்ந்து காட்டிப் பாடி 4வருவதற்குச் (நூல்) சாற்றிற்றென்க. மற்று, அசை. ஆங்கு என்றது, முற்பிறப்பை. 7 ஓரொருகா லுள் 5வழிய ளாகி நிறைமதி | நீரு ணிழற்போற் கொளற்கரியள் (4) போரு | ளடன்மாமே லாற்றுவே னென்னை (5) மடன்மாமேன் | மன்றம் படர்வித் தவள் வாழி சான்றீர் |
எ - து: சான்றீர்! வாழ்வீராக; போரிடத்து வெற்றியினையுடைய குதிரையின்மேலே யிருந்து போர்த்தொழிலை நடத்துவேனாகிய என்னை அம்மாவல்லாத மடன்மாவிலே ஏறி 6அக்களத்தேயன்றி மன்றின்கண்ணே தன்னை உள்ளுவித்தவள், ஒருகால் என் மனத்துள்ளே உளளாயிருந்து பின்னை நீருட்டோன்றிய நிறைமதியினுடைய நிழல் வாங்கிக்கோடற்கு அரியவாறுபோல வாங்கிக்கோடற்கு அரியளாயிராநின்றாளென்றான். எ - று.
(கலி. 39 : 46.) என்புழி, ‘புரி திரிபு’ என்பதற்கு, ‘வேறுபட்டுத் தப்புதல்’ என்று பொருளெழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலது. 1. இந்நூற்பக்கம் 857 : 7-ஆம் குறிப்புப் பார்க்க. 2. இந்நூற்பக்கம் 858 : 2-ஆம் குறிப்பில் (ஆ) முதலியவை பார்க்க. 3. பெறுதற்கருமையில், ‘‘பரவைவெண்டிரை வடகடற் படுநுகத்துளையுட், டிரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி, யரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற், பெரிய யோனிகள் பிழைத்திவண்மானிடம் பெறலே’’ சீவக. 2749. என்பது முதலியன நோக்குக. 4. ‘‘ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு, ணண்ணாரு முட்குமென்பீடு’’ குறள். 1088. 5. ‘‘நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின் றுடையேன், காமுற்றா ரேறு மடல்’’ குறள். 1133. (பிரதிபேதம்)1அணிநலப்பெண்ணை, 2யாக்கைகள முற்பிறப்பில்லாத மனம், 3வருதற்கு, 4வருதற்கு, 5வழியாளாகி, 6அக்களத்தன்றி.
|