பக்கம் எண் :

878கலித்தொகை

ஆற்றுவேனென்னை.........படர்வித்தவளென்றது, (1) தறுகண்மையென்னும் மெய்ப்பாடு. வாழிசான்றீரென்றது, ஒருமைப் பன்மைமயக்கம்.

11 (2) பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை

மையறு 1மண்டிலம் வேட்டனள் (3) வையம்

புரவூக்கு முளளத்தே னென்னை யிரவூக்கு

மின்னா விடும்பைசெய் தாள் (4) அம்ம சான்றீர்

எ - து: கேளீர் சான்றீர்! உலகத்தையெல்லாம் பாதுகாத்தலை முயலும் உள்ளத்தையுடையேனாகிய என்னை ஒருவர்பால் ஒன்றை (5) இரத்தலைமுயலும் இன்னாதாகிய வருத்தத்தைச் செய்தவள் கீழைத் திசையிடத்துத் தோன்றின, பொய்யற்ற நன்மக்கள் உயர்த்துப் புகழ்ந்த, மாசற்ற ஞாயிற்றின் மண்டிலத்தை யான் வாங்கிக் கோடற்கு 2விரும்பின அத்தன்மையளாய் இராநின்றாள்; என்றான் எ - று.

என்றது (6) கொடையென்னும் மெய்ப்பாடு.

15 கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் 3றிஃதோ

பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு

எ - து: பரந்த சுணங்கினையுடைய, பணைபோலுந் தோளினை 4யுடையாள் தான் மறைந்தபொழுதே பொறுத்தற்கரிய நோயைச் செய்யாநிற்கும்; அவள்குணம் எக்காலமும் இத்தன்மைத்தோ கூறின் என்றான். எ - று.


1. இம்மெய்ப்பாட்டுக்கே (தொல். மெய்ப். சூ. 9. பேர். இ-வி. சூ. 578. உரைகளிலும்) ‘‘அடன்மாமேல்...........படர்வித்தவள்’’ என்னும் பகுதி மேற்கோள்.

2. ‘‘கொடிநிலை’’ என்பதற்கு, ‘கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத்தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்’’ என்று பொருளும் ஆகுபெயரென்று இலக்கணமுங்கூறி, ‘‘பொய்தீ ருலக........செய்தாள்’’ என்பதனை மேற்கோள் காட்டினர், நச்சினார்க்கினியர்; தொல். புறத். சூ. 33. உலகவழக்கினும், ‘கொடி’ என்பது கீழ்த்திசைக்குப் பெயராய் வழங்குகின்றது.

3. ‘இரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லு முலகம், புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்’’ கலி. 47 : 1 - 2.

4. ‘‘அம்ம கேட்பிக்கும்’’ தொல். இடைச். சூ. 28.

5. (அ) ‘‘இரவினை, யுள்ளுங்கா லுள்ள முருகுமால்’’ நாலடி. 305. (ஆ) ‘‘இரத்தலி னின்னாது’’ (இ) ‘‘இரவுள்ள வுள்ள முருகும்’’ குறள். 229, 1069.

6. இம்மெய்ப்பாட்டுக்கே (தொல். மெய்ப். சூ. 9. பேர். இ-வி. சூ. 578 உரைகளில்) ‘‘வையம், புரவூக்கு......செய்தாள்’’ என்பது மேற்கோள்.

(பிரதிபேதம்)1மண்டலம், 2விரும்பினவளத்தன்மை, 3ஈதே, 4உடையாளதாளதான்மறைந்த.