பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்879

17

(1) இடியுமிழ் வானத் திரவிருள் போழுங்

கொடிமின்னுக் கொள்வேனென் றன்னள் (2) வடிநாவின்

(3)1வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க்

கல்லாமை காட்டி யவள் வாழி சான்றீர்

எ - து: பின்னும் வாழ்வீராக; சான்றீர்! வழுவின சொற்கள் சொல்லாதபடி தெள்ளிய நாவினாலே வார்த்தைசொல்ல வல்லார்முன்னே சொல்லுதல் வல்லேனாகிய என்னைப் பிறர்முன்னே ஒன்றையுங் கல்லாத தன்மையனாகக் காட்டியவள், இராக்காலத்து இடியை உமிழ்கின்ற மேகத்திலிருளைப் போழும் ஒழுங்கினையுடைய மின்னை வாங்கிக்கொள்வேனென்று ஒருவன் கருதிய தன்மையளாய் இராநின்றாளென்றான். எ - று.

வல்லார்முற்சொல்........காட்டியவளென்று (4) கல்விபற்றிய பெருமிதம்; என்னையும் கல்லாமை காட்டினாள் என்றலின். வாழி சான்றீரென்று அதனை முடிப்பாராக் கருதி வாழ்த்தினான்.

21 

என்றாங்கே

வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாடத்
திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே
பொருந்தாதார் 2போர்வல் வழுதிக் கருந்திறை
போலக் கொடுத்தார் தமர்

எ - து: என்றுசொல்லி அவ்வூரிடத்து மறுகின்கண்ணே கண்டார் வருந்த மடன்மாவை ஏறிப்பாட, திருந்தின இழையினையுடையாளைத் தான் பெறுதற்குப் பொருந்தின வார்த்தைகளைத் தான் கூறக்கேட்டு, பகைவர் போர்த்தொழிலைவல்லபாண்டியனுக்கு அஞ்சி அரியதிறைகொடுக்குமாறுபோல,


1. (அ) ‘‘இடியுமிழ் பிரங்கிய விரவுப்பெயல்’’ கலி. 41. 5. என்பதும் அதன் குறிப்பும் (ஆ) ‘‘இடியுமிழ் வானம்’’ அகம். 77 : 5. (இ) ‘‘இடியுமிழ் வானத் திடை’’ (தொல். செய். சூ. 152. பேர், நச். உரை. மேற். ‘‘செஞ்சுடர்’) என்பவையும் ஒப்புநோக்கற்பாலன.

2. ”வடியா நாவின் வல்லாங்குப் பாடி’’ புறம். 47 : 3.

3. ‘‘தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று, மலைத்தறிவாரில்லை யாரையுந் தேற்றுவ னெத்துணையுங், கலைச்சிறு திங்கண் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை, மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே’’ கோவையார். 25. 

4. இச்செய்திக்கே (தொல். மெய்ப். சூ. 9; பேர்; இ - வி. சூ. 578. உரைகளிலும்) ‘‘வல்லார்முற்......காட்டியவள்’’ என்பது மேற்கோள். 

(பிரதிபேதம்)1வல்லாருட் சொல், 2போர்வேல்.