பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்883

37  (1) கதிர்பகா ஞாயிறே கல்1சேர்தி யாயி
னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித்
தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத்
துயிர்திரியா மாட்டிய தீ;
41 மையில் சுடரே மலை2சேர்தி நீயாயிற்
பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு 3மாத்திரை
கை (2) விளக் காகக் கதிர்சில தாராயென்
றொய்யில் சிதைத்தானைத் 4தேர்கு;
45  5சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ வெம்மை
நயந்து நலஞ்சிதைத் தான்;
47  (3) மன்றப் 6பனைமேன் மலை (4) மாந் தளிரேநீ
தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ
(5) 7மென்றோண் ஞெகிழ்த்தான் றகையல்லால் யான்காணே 
னன்றுதீ தென்று பிற;
51 நோயெரி யாகச் சுடினுஞ் 8சுழற்றியென்
னாயித ழுள்ளே 9கரப்பன் கரந்தாங்கே

1. ‘‘கதிர்பகா ஞாயிறே........மாட்டிய தீ’’ என்னும் பகுதி, ஞாயிற்றைக் கேட்குநபோலக் கூறியதற்கு மேற்கோள்; தொல். செய்; சூ. 201. பேர். சூ. 200. நச்.

2. ‘‘விட்டி லங்கொளி வெய்யவன் றனதுமெல் விரலாற், சுட்டி யெங்கணுங் காட்டல்போற் சுடர்வன சுடர்கள்’’ நைடதம். மாலைப். 12.

3. ஞாயிறுமுதல் புள்ளீறாகச் சொல்லப்பட்டவைகளைச் சொல்லுவனவுங் கேட்பனவும் போலக் கூறுதலல்லாமலும் பிறவற்றையும் அவ்வாறு கூறுதலுண்டென்பதற்கு, ‘‘மன்றப் பனைமேன் மலைமாந் தளிரே’’
என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 190. இளம். ‘ஞாயிறு’

4. ‘‘மாஅந் தளிர்கொண்ட போழ்தினான்’’ கலி. 143 : 27. 

5. ‘‘மென்றோண் ஞெகிழ்த்தான்...........தீதென்று பிற’’ என்பது, உறுபெயர்கேட்டலென்னும் மெய்ப்பாட்டுக்கு மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 22.

(பிரதிபேதம்)1சேர்தி நீயாயிற், 2சேர்தி யாயிற், 3மாத்திரைக்கை, 4தொககு, 5சினந்தானைச், 6பணைமேல், 7என்றோ ணெகிழ்த்தான் றிறமல்லாலியான், 8சுற்றியென், 9கரப்பென்.