| நோயுறு (1) வெந்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு வேவ தளித்திவ் வுலகு; | 55 | மெலியப் பொறுத்தேன் 1களைந்தீமின் சான்றீர் நலிதருங் (2) காமமுங் கௌவையு மென்றிவ் 2வலிதி (3) னுயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழும மிரண்டு; எனப்பாடி; | 60 | (4) 3இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன ளெல்லையு மிரவுங் கழிந்தன 4வென்றெண்ணி (5) யெல்லிரா 5நல்கிய கேள்வ னிவன்மன்ற 6மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் 7துணிவாங் கலஞ்சிதை (6) யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா ணல்லெழின் மார்பனைச் 8சார்ந்து. |
1. ஸௌதாஸனென்னும் அரசன் தன் குலகுருவாகிய வசிட்டமுனியைச் சபித்தற்கு நீரைக் கைக்கொண்டபோது தன் மனைவியாகிய மதயந்தி கூற்றால் தடையுண்டு அந்நீரை மேலே வீசின் மழைவளமும் கீழே வீழ்த்தின் நிலவளமும் அறுமென்று தன்காலிற்பெய்து கன்மாட பாதனாயினனென்னும் வரலாறு இங்கே அறிதற்பாலது. 2. ‘‘நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற், காம நுதுப்பே மெனல்’’ குறள். 1148. 3. (அ) ‘‘காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென், னோனா வுடம்பி னகத்து’’ (ஆ) ‘‘ஒருதலையா னின்னாது காமங்காப் போல, விருதலை யானு மினிது’’ குறள். 1163; 1196. 4. (அ) ‘‘இனைந்துநொந் தழுதனள்........சார்ந்து’’ என்னும் பகுதி, பெருந்திணைக்கட் கண்டோர் கூறியதற்கு மேற்; தொல். அகத். சூ. 45. (ஆ) ‘‘இனைபேங்கி யழுதனை’’ கலி. 122 : 5. 5. “எல்லிரா.........மெல்ல’’ என வெள்ளைச்சுரிதகத்துள் ஐஞ்சீரடியும் வந்தது’’ என்பது தொல். செய். சூ. 154. பேர். 6. (அ) ‘‘தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து, மாறுகொண் டோரா மனத்தின ளாகி’’ மணி. 23 : 142 - 143. (ஆ) ‘‘இல்லின், படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக், கலுழி நீக்குங் கம்மியர் போல, மகர வீணையின் மனமாசு கழிஇ’’ பெருங். (1) 35 : 215 - 218. (பிரதிபேதம்)1களைந்தபின், 2வலிதிலுயிர், 3இணைந்துநைந்து, 4என்றெண்ணி நல்கிய, 5ஒல்கிய, 6மெல்லியலமணியிற், 7துணிபாம், 8சார்ந்து. ஓஓ, இரக்கக்குறிப்பு. நகுதிரோ.......ஓகாரம், எதிர்மறை கேட்பீராக இவடன்லுடனே.
|