பக்கம் எண் :

886கலித்தொகை

ஓதலுந் தூதும் ஒழிந்த பகைவயிற்பிரிவாகிய வாளாணெதிரும் பிரிவும் முடியுடை 1வேந்தர்க்கும் அவர் ஏவலிற் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின் அப்பிரிவிற் பிரிகின்றான் ‘வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்’ (1) என்பதனாற் கற்புப்போல நீ இவ்வாறொழுகி யான் வருந்துணையும் 2ஆற்றியிருவென ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கண3மன்மையின், வாளாபிரியுமன்றே? அங்ஙனம் பிரிந்துழி அவன் கூறிய 4கூற்றினையேகொண்டு ஆற்றுவிக்குந் தோழிக்கும் ஆற்றுவித்தலரிதாகலின், அவட்கு அன்பின்றி நீங்கினானென்று ஆற்றுமை மிக்கு ஆண்டுப் பெருந்திணைப்பகுதி நிகழுமென்று உணர்க. (இ-ள்.) பொழுது-அந்திக்காலத்தே, கையறுகாலை-‘புறஞ்செயச்5சிதைதல்’ என்னும் (2) சூத்திரத்தில் ‘அதனினூங்கின்று’ எனக்கூறியகையறவுரைத்தலென்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே, தலைவைத்த 6அநத ஆறுமறுதியின் இகந்தனவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள், மிகுதியொடு மடனே வருத்தம் மருட்கை நாற்பொருட்கண்நிகழும் 7தன் வனப்பு மிகுதியுடனே மடப்பழம் ஆற்றாமையும் வியப்புமாகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; அவை இறந்தபோலக் கிளக்குங் கிளவி என்ப-அங்ஙனம் அவை 8நடக்கின்ற நான்குபொருளும் கூற்றுநிகழுங்கால்தன்னைக் கைகடந்தனபோலக் கூறுங் கூற்றாய் நிகழுமென்று கூறுவர் புலவர். எ-று. தலைவைத்த மெய்ப்பாடாவன- 9‘ஆறாம்அறுதியினும் ஒப்பத்தோன்றுதற்குரிய மெய்ப்பாடுகளாய் 10மன்றத்திருந்த சான்றோரறியத் தன் துணைவன் பெயரும் பெற்றியும் அவனொடு புணர்ந்தமையும் தோன்றக் 11கூறியும் அழுதும் அரற்றியும் பொழுதொடு 12புலம்பியும் ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும் பிறவுமாம்’ 13என்னும் விதிபற்றி வரவிடைப் பிரிந்து நீட்டித்துழித் தலைவி பிரிவாற்றகில்லாது நாணு வரையிறந்து கலங்கி மொழிந்து அறிவழிந்துழி அவன்வந்து சாரத் தெளிந்தமை கண்டார் 14கூறிற்றென்று கூறியது.


காட்டுதும்; ஆண்டோதும் இலக்கணங்களுந் தோன்ற இதனுட் டெளிந்து கூறுவனவும் ஆண்டுக் காண்க’ என்றும் இவ்வுரையாசிரியர் கூறியுள்ளார். (ஈ) இலக்கண விளக்க நூலாசிரியரும் ஏறிய மடற்றிறத்துக்கே இச்செய்யுளை மேற்கோள் காட்டினர்; இ - வி. சூ. 591.

1. தொல். கற். சூ. 44.

2. தொல். மெய்ப். சூ. 18.

(பிரதிபேதம்)1வேந்தர்க்கு மரைசர்க்கும், 2ஆற்றுகவென் றாற்றுவித்து, 3இன்மையின், 4கூற்றை, 5சிதைத்தல் என்னுஞ் சூத்திரத்து இதனினூங்கின்று, 6அந்த ஆற்றாமையின், 7என் வனப்பு, 8நடக்கின்றவை நான்கு, 9ஆறாமலதியினும் பரந்து தோன்று, 10மன்றத்துச் சான்றோர், 11கூறியழுது மரற்றியும், 12புலம்பிய, 13இவ்விதி, இதுவிதி, 14கூறிற்றென்றுகிளவிகூறியவாறுணர்க.